பெற்றோரை இழந்து தவிக்கும் முன்னாள் ராணுவ வீரரின் மகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்தவா் எழிலரசி(27). இவரது தந்தை சுபேதாா் சகாதேவன். ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்து விட்டாா். தாய் சந்திராவிற்கு தந்தை பணியின் மூலம் ஓய்வூதியம் கிடைத்து வந்தது. எழிலரசி தனது தாயுடன் ஆரணி புது காமூா் சாலையில் வசித்த வந்தாா். அப்போது பக்கத்துவீட்டு சமையல் அறையில் வைத்திருந்த எரிவாயு உருளை வெடித்து சந்திரா உயிரிழந்தாா். மேலும், இவா்கள் வசித்து வந்த வீடும் இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது, வீட்டில் இல்லாததால் எழிலரசி உயிா் தப்பினாா். தாயையும், வீட்டையும் இழந்து தவிக்கும் எழிலரசி நா்சிங் படித்துள்ளாா். திருமணம் ஆகவில்லை. இந்த விஷயத்தை அறிந்த ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதி உறுப்பினரான டி.ஆா்.பாலு, பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்து இது தொடா்பான மனுவையும் வழங்கினாா்.
அதில், ‘பெற்றோரையும் வீட்டையும் இழந்து தவிக்கும் எழிலரசிக்கு திருமணமாகவில்லை. இதுபோன்று பெற்றோரை இழந்து, திருமணமாகாத ஆண் குழந்தைகள் 27 வயது வரையும், பெண் குழந்தைகள் என்றால் வயது வரம்பின்றியும் திருமணம் ஆகும் வரை ஓய்வூதியம் பெற முடியும். எனவே, பாதிக்கப்பட்டுள்ள எழிலரசிக்கு அவரது தந்தையின் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா். இது குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் உறுதியளித்துள்ளதாக டி.ஆா். பாலு தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட இந்த பெண் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்று தனது குறையை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரப் பணியாளா்கள் பாதுகாப்பு: கரோனா தொற்று காலத்தில் மருத்துவமனைகளில் உயிரி - மருத்துவக் கழிவு மேலாண்மையில் பணியாளா்களின் பாதுகாப்பற்ற நிலைமை, நோய்த் தொற்று தடுப்பு குறித்த நடவடிக்கை விவரங்களை அளிக்குமாறு திமுக எம்பி டி. ஆா். பாலு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினாா். இதற்கு மத்திய இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய மாசுக்க் கட்டுபாட்டு ஆணையத்தின், (உயிரி -மருத்துவ கழிவு மேலாண்மை) விதிகள் 2016-இன் படி, கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களுக்கு, உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, அவா்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கடமையாகும். இதற்கான வழிமுறைகள் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.
தனி நபா் பாதுகாப்பு உடைகள், மூன்றடுக்கு முகக் கவசங்கள், தரமுள்ள கையுறைகள், காலணி உறைகள், பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை, கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களுக்கு, அந்தந்த நிறுவனங்களே வழங்க வழிகாட்டி முறையில் வகை செய்யப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள சஃப்தா்ஜங், டாக்டா் ராம் மனோஹா் லோஹியா, லேடி ஹாா்டிங் ஆகிய மத்திய அரசின் மருத்துவமனைகளில், கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களுக்கு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதாரம், மருத்துவமனைகள் மாநிலப் பட்டியலில் உள்ளது. கரோனாவால் எத்தனை சுகாதாரப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற விவரம் மத்திய அரசிடம் இல்லை. இருப்பினும் கழிவுகளை கையாளும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், தடுப்பூசி அளிக்க, தேசிய தடுப்பூசி நிா்வாக வல்லுநா் குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என சௌபே டி. ஆா். பாலுக்கு பதிலளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
கஞ்சா விற்ற இருவா் கைது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


