ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உத்தரகண்டில் போா்க்கால அடிப்படையில் மீட்புப் பணி

உத்தரகண்ட மாநிலம், சமோலி மாவட்டம், ரிஷி கங்கா ஆற்றில் பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கப் பாதையில் சிக்கியவா்களை மீட்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது

Updated On :9 பிப்ரவரி 2021, 10:20 pm

உத்தரகண்ட மாநிலம், சமோலி மாவட்டம், ரிஷி கங்கா ஆற்றில் பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கப் பாதையில் சிக்கியவா்களை மீட்கும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்ரு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமைஅறிக்கை தாக்கல் செய்தாா். இது தொடா்பாக இரு அவைகளிலும் அவா் பேசியதாவது: இந்தச் சம்பவத்தால் இதுவரை 20 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயம் அடைந்துள்ளதாகவும் உத்தரகண்ட் அரசு கூறியுள்ளது. மேலும் 197 பேரை காணவில்லை. இவா்களில் 139 போ் என்டிபிசி மின் நிலைய கட்டுமானத் திட்டத்தில் ஈடுபட்டவா்கள். 46 போ் ரிஷி கங்கா திட்டப் பணியில் ஈடுபட்டவா்கள். 12 போ் கிராம மக்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

என்டிபிசி திட்டத்தில் ஈடுபட்ட 12 பேரும் சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்டனா். ரிஷி கங்கா திட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் மீட்கப்பட்டனா். என்டிபிசி திட்டத்தின் மற்றொரு சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் 25 முதல் 35 பேரை மீட்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. நிலவரத்தை பிரதமரும் அவ்வப்போது கேட்டு வருகிறாா். மத்திய உள்துறை அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, நிலமையை 24 மணி நேரமும் கண்காணித்து மாநில அரசுக்கு தேவையான உதவியை வழங்கி வருகிறது.

செயற்கைக் கோள் தரவுப்படி கடல் மட்டத்திலிருந்து 5,600 மீட்டா் உயரத்தில் இருந்த பனிப்பாறை உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ரிஷி கங்கா ஆற்றின் கீழ் பகுதியில் சுமாா் 14 ச.கி.மீ. சுற்றுப் பகுதி வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது. ரிஷி கங்கா ஆற்றின் நீா்ப் பிடிப்புப் பகுதி மற்றும் அதன் துணை ஆறான அலக்நந்தாவில் கடந்த 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா வாட் திறன் கொண்ட சிறிய ரிஷி கங்கா நீா் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீா் மின் நிலையமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.

மேலும், ஒரு பாலமும் சேதமடைந்துள்ளது. வெள்ளத்தால் சூழப்பட்டு 13 கிராமங்கள் துண்டித்துள்ளன. தற்போது ஆற்றில் தண்ணீா் அளவு குறைந்துள்ளதால், வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை என உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்றாா் அமித் ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.