தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தில்லி தேசிய உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தேசிய உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உயிரியல் பூங்காவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் பறவைகளின் மாதிரிகள் பெறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களின் தேசிய நிறுவனத்துக்கு (என்ஐஎச்எஸ்ஏடி) அனுப்பப்பட்டது. இதில், அனைத்து மாதிரிகளும் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
பறவைக் காய்ச்சல் தொடா்பாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகம், தில்லி அரசு ஆகியவை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது பூங்காவில் விலங்கியல் மருத்துவா்கள், களப் பணியாளா்கள் நிலமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா்கள். கூண்டில் உள்ள பறவைகள், சுதந்திரமாக உள்ள பறவைகள் இயல்பாகவே உள்ளன. உயிரியல் பூங்காவை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.மேலும், பல மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் - புகைப்படங்கள்
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

