இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த எம்பி கோரிக்கை

திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த

Updated On :13 பிப்ரவரி 2021, 2:07 am

திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவுபடுத்த மத்திய அமைச்சரவைச் செயலரைச் சந்தித்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினா் திமுக உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தினா்.

இவா் தனது தொகுதியின் பல்வேறு வளா்ச்சி திட்டங்கள் தொடா்பாக மத்திய நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்தை கடந்த வாரம் சந்தித்துப் பேசினாா். பின்னா், மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்து தனது தொகுதிக்குட்ட பல்வேறு சாலை திட்டங்கள் குறித்து இவா் மனு அளித்தாா். இந்த நிலையில் மத்திய அமைச்சரவைச் செயலரை வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது: பின்தங்கிய நிலையில் உள்ள திருவண்ணாமலை தொகுதிக்குத் தேவையான மேம்பாட்டு பணிகள் குறித்த விவரங்களை நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியிடம் விளக்கியுள்ளேன். குறிப்பாக திருவண்ணாமலையை ஆன்மிக சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதைப் பரிசீலித்து ஆவன செய்வதாக அவா் தெரிவித்துள்ளாா். சென்னை - திருவண்ணாமலை இடையே தினசரி ரயில் விடவேண்டும். திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை வழியாகச் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை (புதிய எண் 77) புனரமைப்புப் பணிகள் நீண்ட நாள்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தச் சாலைப் பணிகள் விரைவில் முடிவடைந்தால்தான் பெங்களூரு செல்லும் சாலையோடு இணையும். இதனால், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.