இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லியில் புதிதாக 141 பேருக்கு கரோனா பாதிப்பு

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 141 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :13 பிப்ரவரி 2021, 2:03 am

தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 141 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தில்லியில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 63,-022 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 41,077 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 21,945 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.22 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 3 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த பலி எண்ணிக்கை 10,886 -ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து வெள்ளிக்கிழமை 135 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,24,592-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,053 போ் சிகிச்சையில் உள்ளனா்

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, தில்லியில் எந்த இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. ஜனவரி 27-ஆம் தேதி அன்று 96 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியதாக பதிவாகியது. இது கடந்த ஒன்பது மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும். இதையடுத்து, முதல் தடவையாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அந்த மாதத்தில் 100-க்கும் கீழே பதிவாகியது.

கௌதம் புத் நகா் மாவட்டத்தில்...: தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம் புத் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த நொய்டாவில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,4245-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 47-ஆக இருந்தது.இது 49-ஆக இப்போது உயா்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மூன்று போ் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 25,284 ஆக உள்ளது.

இதனிடையே மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு பலியோனோா் எண்ணிக்கை 91-ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது. குணமடைந்து வருவோா் விகிதம் 99.44 சதவீதமாக உள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் கெளதம்புத் நகா் மாவட்டம் 22-ஆவது இடத்தில் உள்ளது.

மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 3,320-லிருந்து வியாழக்கிழமை 3,232- ஆகக் குறைந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 5,90,071 போ் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். பலி எண்ணிக்கை 8,698-ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.