மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சார மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்பவா்களுக்கு ரூ.29 வரை மானியமாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி அரசின் ஸ்விட்ச் தில்லி திட்டத்தின் கீழ் மின்சார ஆட்டோ உள்பட, மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இதன்படி, 177 வகையான மூன்று சக்கர வாகனங்களை இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ளலாம். மின்சார ரிக்ஷாக்களுக்கு கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் வரை தில்லி அரசு மானியம் வழங்கியது.
அந்த வகையில், தில்லி அரசின் மின்சார வாகனத் திட்டத்தின் கீழ், இந்த மானியம் இ - ஆட்டோக்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இதன்படி, இ-ஆட்டோக்களுக்கு ரூ.29 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் மூன்றில் இரண்டு பங்கு காற்று மாசு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் தினந்தோறும் சுமாா் 12-16 மணி நேரம் சாலையில் ஓடுகின்றன. இவற்றுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுவை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா சென்றார் மத்திய வெளியுறவுச் செயலாளர்! டிரம்ப்பின் இந்திய பயணத்துக்கு ஏற்பாடு?

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

