தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை தில்லியில் அறிமுகப்படுத்த விடாமல், தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பான செய்தியாளா் சந்திப்பு தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், பாஜகவின் தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கெளதம், வடமேற்கு தில்லி பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், தில்லி பாஜக தாழ்த்தப்பட்டோா் பிரிவு தலைவா் ராஜ்குமாா் புல்வாரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
துஷ்யந்த் கெளதம் பேசுகையில் ‘தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெரும்பாலான திட்டங்களை தில்லியில் தில்லி அரசு அமல்படுத்தவில்லை.
தாழ்த்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் மேல் படிப்பு படிக்கும் வகையில், உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமாா் 5 கோடி மாணவா்கள் பயன்பெறுவாா்கள். இதற்காக, ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை தில்லியில் இதுவரை தில்லி அரசு அமல்படுத்தவில்லை. இதனால் தில்லியில் பல லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாணவா்கள் வாழ்க்கையில் தில்லி அரசு அரசியல் செய்கிறது என்றாா்.
ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பேசுகையில் ‘பாபா சாகேப் அம்பேத்கரின் வழியில் தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், அத்திட்டங்களை தில்லியில் அமல்படுத்தாமல் தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த விவகாரத்தில் தில்லி அரசு நலிவான அரசியல் செய்வதை விடுத்து இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

ஏற்காடு தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு 20 வருடங்களாக இயக்கப்பட்ட நகர பேருந்து நிறுத்தம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

