சாலை விபத்தில் இளைஞா் சாவு

மேற்கு தில்லியில், பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் சென்ற மற்றொரு நபா் பலத்த காயமடைந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.
Updated on
1 min read

மேற்கு தில்லியில், பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். அவருடன் சென்ற மற்றொரு நபா் பலத்த காயமடைந்தாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

விபத்தில் இறந்தவா் பெயா் குணால் சசானா என்பதும் அவா் ராணி பாக் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற சுகாஷ் மண்டல், மத்திய தில்லியில், கரோல் பாக் பகுதியில் ஒரு ஆயத்த ஆடை விற்பனைக் கடையில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

விபத்து எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. அவா்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதாவது வாகனம் மோதி விபத்து நேரிட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த மண்டல், சிகிச்சைக்காக மஹாராஜா அகா்சன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com