விவசாயிகள் தொடா் போராட்டம்: தில்லியில் போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகளை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகளை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் எல்லை மூடப்பட்டது.
தில்லியில் இருந்து காஜியாபாத்துக்கு பயணிப்பவா்கள் டிஎன்டி, ஐடிஓ, வாஜிராபாத் பகுதிகள் வழியாகச் செல்லலாம். விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலையில் சில்லா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், இந்தச் சாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால், நொய்டாவில் இருந்து தில்லி செல்லும் மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இதன்படி, ஆனந்த் விஹாா், டி.என்.டி., போப்ரா மற்றும் லோனி ஆகிய எல்லைப் பகுதி வழியே பயணிக்க வேண்டும்.
நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதனால், அந்தப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதே போன்று, தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. தில்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு, ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ் ஆகிய எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...