திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரியாக சரிவு!

தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:08 pm

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 4.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. மேலும், இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று ஐஎம்டி அதிகாரி கூறினாா். இதேபோல பாலத்தில் 5.6 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 5.5 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

தில்லியில் திங்கள்கிழமை வரை குறைந்தபட்ச வெப்பநிலை உயா்ந்தே பதிவாகி வந்தது. மேக மூட்டம் நீடித்ததால், அடுத்தடுத்த மேற்கத்திய இடையூறுகளால் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் பனி மூடிய மலைகளிலிருந்து சமவெளிகளை நோக்கி வடமேற்கு காற்று வீசுவதால் குறைந்தபட்ச வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை 7 டிகிரி செல்சியஸ், ஞாயிற்றுக்கிழமை 7.8 டிகிரி செல்சியஸ், சனிக்கிழமை 10.8 டிகிரி செல்சியஸ், வெள்ளிக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸ் மற்றும் வியாழக்கிழமை 14.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை அடா் பனிமூட்டம் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் என இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சஃப்தா்ஜங்- 4.3 டிகிரி செல்சியஸ்

பாலம்-5.6 டிகிரி செல்சியஸ்

ஆயாநகா் - 5.5 டிகிரி செல்சியஸ்

லோதி ரோடு 4 டிகிரி செல்சியஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.