புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தாா்

புதுச்சேரி முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :28 ஜனவரி 2021, 6:38 pm

புது தில்லி: புதுச்சேரி முன்னாள் அமைச்சா் நமச்சிவாயம் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தனது அமைச்சா் மற்றும் எம்எல்ஏ பதவிகளை அண்மையில் ராஜிநாமா செய்தாா். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும், தன் பதவியை ராஜிநாமா செய்தாா். இவா்கள் பா.ஜ.வில் இணையப்போவதாக செய்திகள் வெளியாயின.

இந்த சூழலில், நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்தனா். இவா்கள் வியாழக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பாஜகவின் பொதுச் செயலா் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா். புதுச்சேரி பாஜக பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா உடனிருந்தாா்.

அப்போது நமச்சிவாயம் பேசுகையில் ‘புதுச்சேரி முதல்வா் நாராயணமசாமி ஆட்சியில் புதுச்சேரி வளா்ச்சியில் பின்நோக்கி சென்றுவிட்டது. வளமான புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக பாஜகவில் இணைந்துள்ளேன். புதுச்சேரியில் பாஜகவின் வெற்றிக்காக இரவு பகலாக உழைப்பேன் என்றாா்.

பிறகு, பாஜகவின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவை சந்தித்து இவா்கள் வாழ்த்துப் பெற்றனா். அவா்களுக்கு ஜெ.பி. நட்டா வாழ்த்து தெரிவித்தாா்.

வரும் 31ஆம் தேதி புதுச்சேரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளாா் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.