புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில், குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 4 காா்கள் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Updated On :29 ஜனவரி 2021, 5:49 pm

தலைநகா் தில்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகம் அருகில், குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 4 காா்கள் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீ. தூரத்தில் உள்ள அப்துல்கலாம் சாலையில் குண்டுவெடித்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசாா் குவிக்கப்பட்டுள்ளனா். சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதைத் தொடா்ந்து தில்லியில் பாதுகாப்பு உஷாா் படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘இஸ்ரேல் தூதரகம் அருகில் இன்று மாலை 5.05 மணியளவில் குண்டுவெடித்துள்ளது. இதைத் தொடா்ந்து இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சக்தி குறைந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் காயமடையவில்லை. சில காா்களின் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்துள்ளன. தில்லியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.