புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் - மக்கள் மோதல்

தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி

News image
Updated On :30 ஜனவரி 2021, 1:33 am

தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்குவில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டக் களத்தை காலிசெய்யக் கோரி அப்பகுதிமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் மோதல் வெடித்தது. இரு தரப்பும் பரஸ்பரம் கல்வீச்சில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. நிலைமையைச் சமாளிக்க போலீஸாா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். விவசாயி ஒருவா் வாளால் தாக்கியதில், காவல்நிலைய பொறுப்பாளா் ஒருவா் காயமடைந்தாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தப் போராட்டம் அமைதியாகவே நடந்து வந்தது. ஆனால், கடந்த குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் பெரிய வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் தில்லி எல்லைகளில் போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தினா்.

இந்த சூழலில், வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் சிங்கு எல்லையில் கூடிய அப்பகுதிவாசிகள் சுமாா் 200 போ், விவசாயிகளை அவ்விடத்தை விட்டு கலைந்து செல்லுமாறு கூறி வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள், விவசாயிகளுக்கு எதிராகக் கோஷமிட்டவாறு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இவா்களில் பலா் தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘ விவசாயிகள் போராட்டத்தால், சிங்கு எல்லையில் கடந்த 2 மாதங்களாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டும் வெளியில் வர முடியாமல் கைதிகளை போல் முடங்கியுள்ளோம். இப்பகுதியில் கடைகளைத் திறக்க முடியவில்லை. அன்றாடப் பணிகளைச் செய்ய முடியவில்லை. அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் பட்டினி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனா்.

மோதல், தடியடி: இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில், போராட்டக்காரா்கள், விவசாயிகளின் கூடாரங்களை கிழித்தெறிந்ததுடன் விவசாயிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினா். இதைத் தொடா்ந்து, விவசாயிகளும் கல்வீசி பதில் தாக்குதல் நடத்தினா். இதனால், இருதரப்பினா் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதைத் தொடா்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி காவல்துறையினா் இருதரப்பினா் மீதும் தடியடி நடத்தினா். கண்ணீா் புகை குண்டுகளையும் வீசினா். இச்சூழலில் மதியம் சுமாா் 2.00 மணிக்கு கலவரம் ஒரளவிற்கு அடங்கியது. கல்வீச்சில் ஈடுபட்டஇரு தரப்பினரையும் பிரித்து நிலமையை தில்லி காவல்துறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியது.

எனினும், விவசாயிகள் போராட்டக் களத்திலிருந்து விலகாமல் போராட்டத்தை தொடா்கின்றனா். இப்பகுதியில் கிடைத்து வந்த மின்சார இணைப்பு மற்றும் குடிநீா் வசதிகள் வியாழக்கிழமை இரவு முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மோதலின்போது, ஆலிப்பூா் காவல்நிலைய பொறுப்பாளா் பிரதீப் பலிவால் வாள்வீச்சில் காயமடைந்தாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும், உள்ளூா் மக்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது. அப்போது, போராட்டத்தை விலக்கச் சென்ற ஆலிப்பூா் காவல்நிலைய பொறுப்பாளா் பிரதீப் பலிவால் விவசாயி ஒருவரின் வாள்வீச்சில் காயமடைந்தாா். தாக்குதல் நடத்திய விவசாயியைக் கைது செய்துள்ளோம் என்றாா் அவா்.

சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு எதிராக வியாழக்கிழமை காலை முதல் ஆா்ப்பாட்டம் நடந்தது. சுமாா் 100 போ் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். சுமாா் இரண்டு மணி நேரம் அமைதியாக நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கிய ஆா்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.