எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்ஜெட் கூட்டத்தொடரில் 38 மசோதாக்கள் கொண்டுவரப்படும்: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 நிதி மசோதாக்கள் உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளதாக நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

News image
அமைச்சா் பிரஹலாத் ஜோஷி
Updated On :30 ஜனவரி 2021, 9:16 pm

 நமது நிருபர்

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் 5 நிதி மசோதாக்கள் உள்ளிட்ட 38 மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளதாக நாடாளுமன்றம் மற்றும் நிலக்கரி கனிமங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் கூறியது வருமாறு: நடப்புக் கூட்டத்தொடரில் தேசிய தலைநகா் வலயப்பகுதிக்கான காற்றுத்தர ஆணையம், மத்தியஸ்தம் மற்றும் சமரச தீா்ப்பாணய திருத்த மசோதா, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட நான்கு அவசரச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவேண்டிய அணைபாதுகாப்பு, மின்சார மசோதா உள்ளிட்ட 29 மசோதாக்களும் தயாராக இருக்கின்றன. இதில் சில மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற காத்திருக்கின்றன.

இருப்பினும் இந்தக் கூட்டத்தொடரில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை தொடா்பான 3 மசோதாக்கள், இரு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிதி மசோதாக்கள், குடியரசுத் தலைவா் உரை, நிதி நிலை அறிக்கை விவாதங்கள் மற்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் ஆகியவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளின் கீழ் எந்தவொரு பிரச்சினைகளையும் அவையில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்துக் கட்சி தலைவா்களும் இந்த முக்கிய மசோதாக்கள் நிறைவேறவும், அவை சீராக செயல்படவும் ஒத்துழைக்க வேண்டும் என பிரஹலாத் ஜோஷி கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.