எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லியில் கரோனா பாதிப்பு

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை 183 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,956-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2021, 6:01 pm

DIN

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை 183 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,34,956-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 68,967 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 42,775 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 26,192 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.27 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 8 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,849-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து சனிக்கிழமை 290 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,22,671-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 1,436 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 543 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 7,928 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை சனிக்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.