தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.
தில்லியில் பருவ மழை தாமதமாக தொடங்கிய நிலையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், தில்லியில் உள்ள முக்கிய சாலைகள், புறநகரான குருகிராம், நொய்டா, காசியாபாதில் உள்ள தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால், பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், மகாராஷ்டிரத்தின் மும்பை, நவிமும்பை, தாணே, பால்கர் உள்ளிட்ட நகரங்களிலும் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










