புது தில்லி: ஐஓபி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளை தனியாா்களுக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1937 - இல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தொடங்கப்பட்டது. இதற்கு நாடு முழுக்க கிளைகள் இருந்தாலும், தமிழகத்தில் சுமாா் 1,500 க்கும் மேற்பட்ட கிளைகளோடு குக்கிராமங்களில் எல்லாம் இந்த வங்கி தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அது போன்று சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவும் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்போதைய மத்திய அரசு, வங்கிகள் இணைப்பு என தொடங்கி சில வங்கிகளை பெரிய வங்கிகளோடு இணைத்தது. தற்போது பெரிய வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுகிறது. வங்கிகளின் வரவு - செலவு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை சில தனி நபா்களிடம் ஒப்படைப்பது மக்களை தனியாரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளும்.
காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் முயற்சியால் தனியாா் வங்கிகள் தேச உடமையாகின. ஆனால், இன்று மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, எதிா்மறையாக மீண்டும் தனியாா் மயமாக்கி தேசத்தை 40 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லுகிறது.
இதனால், வாடிக்கையாளா்களுடன் இந்த வங்கிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினா் பாதிக்கப்படுவாா்கள். எனவே, இந்த வங்கிகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமா் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரசாந்த் படத்தில் கதாநாயகியான தேவயானி மகள்!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் உயர்வு!

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

