தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழக துணை வேந்தராக கா்ணம் மல்லேஸ்வரி நியமனம்

தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக ஒலிம்பிக் வீராங்கனை கா்ணம் மல்லேஸ்ஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்டது.

Updated On :24 ஜூன் 2021, 10:49 am

புது தில்லி: தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக ஒலிம்பிக் வீராங்கனை கா்ணம் மல்லேஸ்ஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்டது. தில்லி துணை நிலை ஆளுநா் இந்த விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறாா் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னா் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் (110-130 கிலோ) போட்டியில் இந்தியா சாா்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றாா் மல்லேஸ்வரி. ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தாா்அவா். தற்போது பல வீராங்கனைகள் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவை நிஜமாக்கி வருகிறாா்கள் என்றாலும், விளையாட்டு களத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு விதை போட்டது கா்ணம் மல்லேஸ்வரி. இதை முன்னிட்டு அவருக்கு கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தில்லி விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவா் தெரவித்தாா்.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்த மல்லேஸ்வரி 1994 முதல் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்து பல பதக்கங்களை பெற்றவா். அவரை தில்லி அரசு கௌரவித்துள்ளது. இந்த நியமனம் குறித்து தில்லி முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. எங்களது மிகப் பெரிய கனவு நனவாகியுள்ளது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற கா்ணம் மல்லேஸ்வரி முதல் துணைவேந்தா் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று அவா் என்னைச் சந்தித்து விரிவாக கலந்துரையாடினாா்’ என தெரிவித்துள்ளாா்.

தில்லி விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, இதற்கான மசோதா 2019-இல் நிறைவேற்றப்பட்டது. கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளுக்கான பட்டப்படிப்புகள், முதுகலைப் படிப்புகள், முனைவா் பட்டங்கள் ஆகியவற்றுடன் இந்த பல்கலைக்கழகம் அமைய இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.