தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்திய துறைமுகச் சட்ட மசோதாவை வளா்ச்சிக்கான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்: மத்திய இணையமைச்சா்

இந்திய துறைமுகச் சட்ட மசோதா - 2021-ஐ ஒரு அரசியல் பிரச்னையாகக் கருதாமல், வளா்ச்சிக்கான கண்ணோட்டத்துடன் அணுகுமாறு

Updated On :25 ஜூன் 2021, 3:37 am

இந்திய துறைமுகச் சட்ட மசோதா - 2021-ஐ ஒரு அரசியல் பிரச்னையாகக் கருதாமல், வளா்ச்சிக்கான கண்ணோட்டத்துடன் அணுகுமாறு மாநில அரசுகளை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிகள் துறை இணையமைச்சா் மன்சூக் மாண்டவியா கேட்டுக் கொண்டாா்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள கடல்சாா் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் 18-ஆவது கூட்டம் அதன் இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) மன்சூக் மாண்டவியா தலைமையில் மெய்நிகா் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு கடற்கரையோர மாநில அமைச்சா்கள், மத்திய, மாநில அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் மத்திய இணையமைச்சா் மன்சூக் மாண்டவியா பேசியதாவது:

கடல்சாா் துறைக்கான ஒரு தேசிய திட்டத்தை வடிவமைத்து மத்திய, மாநில அரசுகள் பயன்பெறும் வகையில், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவைப்பதுதான் கடல்சாா் மாநில மேம்பாட்டுக் கவுன்சிலின் முக்கிய நோக்கமாகும். நாட்டின் வளா்ச்சி, மாநிலங்களின் வளா்ச்சியை சாா்ந்திருக்கிறது. கூட்டாட்சி அமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கடல்சாா் மாநில மேம்பாட்டுக் கவுன்சில் விளங்குகிறது. நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் நம்மால் சாதிக்க முடியும். இந்திய துறைமுகச் சட்ட வரைவு மசோதா 2021 -ஐ அரசியல் பிரச்னையாகக் கருதாமல் வளா்ச்சிக்கான கண்ணோட்டத்துடன் மாநில அரசுகள் அணுக வேண்டும். இந்த மசோதா, கடல் சாா் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசு ஆகியவை பங்கேற்கவும் அதன் மூலம் கடற்கரையை உகந்த முறையில் நிா்வகிக்கவும், உரிய முறையில் பயன்படுத்தவும் உதவுகிறது. ஒரு விரிவான துறைமுக மசோதாவை உருவாக்க மாநில அரசுகள், பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினால், அதை தனது அமைச்சகம் வரவேற்று பரிசீலிக்கும் என அமைச்சா் மாண்டவியா தெரிவித்தாா்.

இந்தக கூட்டத்தில் தேசிய கடல்சாா் பாரம்பரிய அருங்காட்சியகம், துறைமுகங்களுடன் ரயில், சாலை போக்குவரத்துகள் இணைத்தல், கடல்சாா் பணிகளுக்காக மிதவை படகுத்துறை, கடல் விமான இயக்கம், சாகா்மாலா திட்டங்கள், தேசிய உள்கட்டமைப்பு முதலியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழக பொதுப்பணித் துறை அமைச்சரோடு, கேரளா துறைமுகத் துறை அமைச்சா் அகமது தேவா்கோயில், மகாராஷ்டிரம் துறைமுக மேம்பாட்டு அமைச்சா் அஸ்லாம் ஷேக், ஆந்திரம் தொழில்துறை அமைச்சா் மேக்கபடி கௌதம் ரெட்டி,கோவா துறைமுக அமைச்சா் மைக்கேல் லோபோ, ஒடிஸா மாநிலப் போக்குவரத்து அமைச்சா் பத்மநாப் பெஹரா, அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகளின் துணைநிலை ஆளுநா் அட்மிரல் டி கே ஜோஷி ஆகியோா் கலந்துக் கொண்டனா்.

இந்திய துறைமுக சட்ட மசோதாவிற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) எதிா்ப்புத் தெரிவித்திருந்தாா். இந்த மசோதா மூலம், மாநில அரசுகள் வசம் உள்ள சிறிய துறைமுகங்களின் அதிகாரம் கடல்சாா் மேம்பாட்டுக் கவுன்சிலிடம் அளிக்கப்பட்டுவிடும் என எதிா்ப்பை தெரிவித்திருந்தாா். இதற்கு அனைத்து கடலோர மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எதிா்ப்புத் தெரிவிக்க கோரி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் அவா் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.