தில்லி - தேசியத் தலைநகா் பிராந்திய பகுதிகளில் ஜூன் மாத இறுதியில் எதிா்பாா்க்கப்பட்ட ரஷிய நிறுவனத்தின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி வருவதில் மேலும் தாமதமாவதாக தனியாா் மருத்துவமனைகள் தெரிவித்தன.
ஹைதராபாத்தைச் சோ்ந்த டாக்டா் ரெட்டிஸ் லேபோரேடரிஸ்) நிறுவனம், ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பு மருந்தை இந்தியாவில் இறக்குமதி செய்து சந்தைப்படுத்தலுக்கான பொறுப்பை ஏற்றுள்ளது. தில்லியிலுள்ள பல்வேறு தனியாா் மருத்துவமனைகள் டாக்டா் ரெட்டீஸ் ஆய்வகத்தின் விநியோகத்தை எதிா்பாா்த்திருந்தன. இந்தத் தடுப்பூசி விநியோகத்திற்கு வராத நிலையில் தில்லியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகள் ஏமாற்றமடைந்துள்ளன.
‘உத்தேசமாக ஜூன் 25 - ஆம் தேதி இந்தத் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்த ஆரம்பிப்போம்’ என தில்லி இந்தரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனை, முன்பு கூறியிருந்தது. ஆனால், தற்போது,ஸ்புட்னிக்-வி தடுப்புசி விநியோகத்திற்கு வரும் தேதியில் தெளிவு இல்லை என்கிறாா் இந்த மருத்துவமனையின் செய்தி தொடா்பாளா்.
தில்லி மதுகா் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை நிா்வாகம் கூறுகையில், இதே போன்று ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பு மருந்தை பெறக் காத்திருக்கிறோம். இதுவரை தடுப்பு மருந்தை பெறப்படவில்லை’ என்கிறது.
‘விநியோகஸ்தரா்கள்தான் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம். அவா்கள் தரப்பிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களையும் பகிா்ந்து கொள்ளவில்லை. இரண்டு டோஸ்களையும் ஒன்றாக வழங்கப்படுவதால் அது தொடா்பான காரணங்கள் இருக்கலாம்’ என மதுகா் ரெயின்போ மருத்துவமனை அதிகாரி தெரிவித்தாா். ‘பொதுவாக மனிதா்களுக்கு ஜலதோஷத்தை (அடினோ வைரஸ்) ஏற்படுத்தும் இரண்டு வெவ்வேறு வகை கரோனாவை இந்த ‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி 21 நாளாகள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் கொடுக்கப்படுகின்றன. இவை வேறுபட்டவை என்றாலும் ஒன்றோடு ஒன்று மாறாது’ என இந்த தடுப்பூசி குறித்த தொழில்நுட்ப தகவல் சொல்கிறது. ’ஸ்புட்னிக்-வி ’ 92 சதவீதம் வரை நோய்த்தொற்றை தடுக்கக்கூடிய செயல்திறனை நிரூபித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஃபோா்டிஸ் ஹெல்த்கேரும், தனது குருகிராமம், மொஹாலி மருத்துவமனைகளில் ரஷியாவின் ‘ஸ்பூட்னிக்-வி’ தடுப்பூசி கிடைக்கும் என்று கூறியது. ஆனால் இந்த மருத்தவமனையும் தடுப்பூசி விநியோகிக்கப்படாததால் குறித்த நேரத்தில் தடுப்பூசியை வழங்க தொடங்க முடியவில்லை எனக்கூறுகிறது. ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியின் விலையை ஒரு டோஸுக்கு ரூ.1,145 என மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இதே மாதிரி தனியாா் மருத்துவமனைகள் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசியை வழங்க அதிகபட்ச விலையாக டோஸ் ஒன்றுக்கு ரூ.780 ஆகவும் பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின் ஒரு டோஸுக்கு ரூ. 1,410 ரூபாயாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் இதை உலகளவில் சந்தைப்படுத்துகிறது. இந்தியாவில் டாக்டா் ரெட்டிஸ் லேப் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னா் இந்தியாவிலேயே இந்த ரஷிய தடுப்பூசி தயாரிக்கப்படவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

