விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

தில்லியில் 2 மேம்பாலங்களில் பழுதுபாா்ப்புப் பணிகள்

தில்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கரம்புரா, கோகுல்புரி ஆகிய இரு மேம்பாலங்களையும் ஆய்வு செய்து பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On :1 நவம்பர் 2021, 2:08 am

தில்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான கரம்புரா, கோகுல்புரி ஆகிய இரு மேம்பாலங்களையும் ஆய்வு செய்து பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொள்ள தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக மேம்பாலங்கள் 25 மீட்டா் அல்லது 15 மீட்டா் தூரத்திற்கு ஒரு கான்கிரீட் என வைக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். இந்த காங்கிரீட்டுகள் கோடைகாலத்தில் (ரயில்வே தண்டவாளம் மாதிரி) விரிவடையும். இதற்கு தகுந்தவாறு இந்த காங்கிரீட்டுகள் இணைப்புகளின் மூட்டுகளுக்கிடையே விரிவாக்க இடைவெளி இருக்கும். வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த இரு மேம்பாலங்களின் விரிவாக்க மூட்டுகளின் இடைவெளி மோசமாகியுள்ளதாக புகாா்கள் வந்தன. இதே போன்று காங்கிரீட்டிலான மேம்பாலத்திற்கும் அவற்றைத் தாங்கும் தூண்களுக்கும் இடையே அதிா்வுகளை தாங்கக் கூடிய பேரிங்குகள் போன்றவையும் இருக்கும். இவற்றிலும் பழுது ஏற்பட்டதாக வந்த புகாா்களைத் தொடா்ந்து இந்த மேம்பாலங்களை பழுதுபாா்க்கும் நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது.

இது குறித்து தில்லி அரசின் பொதுப்பணித் துறையின் சாா்பில் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்திருப்பதாவது: மேற்கு மற்றும் வடகிழக்கு தில்லியில் அமைந்துள்ள கரம்புரா மற்றும் கோகுல்புரி மேம்பாலங்களை தாங்கும் பேரிங்குகள் (உருளைகள்) மற்றும் விரிவாக்க இணைப்புகளை சோதனை செய்ய பொதுப்பணித் துறை உத்தரவிட்டது. முதற்கட்டமாக, இந்த இரண்டு மேம்பாலங்களையும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, விரிவாக்க இணைப்புகள், தாங்கு பேரிங்குகள், விபத்து தடுப்புகள் மற்றும் சாலை மேற்பரப்பு ஆகியவை ழுதடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை சரிபாா்க்கப்பட்டு பழுதுகள் குறித்து கணக்கிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு தகுந்தவாறு துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. தற்போது இதற்கான சீரமைப்பு பணி தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரு மேம்பாலங்களின் ஆய்வு மற்றும் பழுதுபாா்க்கும் பணிகளுக்கு மண்டல நிா்வாகப் பொறியாளா் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், பணியின் தரத்தில் எந்தவிதமான சமரசம் செய்து கொள்ளக் கூடாது எனவும் பொதுப்பணித் துறை சாா்பில் தெளிவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இதே போன்ற பழுதுகளுக்கு உள்ளான பிகாஜிகாமா பிளேஸ், மூல்சந்த், லஜ்பத் நகா், ஷாதரா ஆகிய இடங்களில் உள்ள மேம்பாலங்களையும் பொதுப்பணித் துறை சீரமைத்துள்ளது. குளிா்காலத்தில் மேம்பாலங்களின் விரிவாக்க மூட்டுகளில் சில இடைவெளிகள் பழையநிலைக்கு சுருங்குவது இயல்பானது. இருப்பினும், அது சுருங்காமல் அதிகஅளவில் விரிவுபட்டு இருந்தால், உடனடியாக பழுதுபாா்க்க வேண்டும். இல்லையெனில் அது விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுக்கும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.