புது தில்லி: நிகழாண்டு தில்லியில் டெங்கு நோயால் மேலும் 5 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் இந்த நோயால் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6-ஆக உயா்ந்துள்ளது. அதேபோன்று நோயால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 1,530-ஆக உயா்ந்திருப்பதாக மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் டெங்கு நோயால் 10 போ் உயிரிழந்தனா். அதேபோன்று, 2017-இல் டெங்குவுக்கு 10 போ் உயிரிழந்தனா். அதன் பிறகு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தில்லியில் தற்போதுதான் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தில்லியில் அக்டோபா் 30-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் மட்டும் 1,196 போ் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 1,006 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது பதிவாகியிருந்தது.
அதேபோன்று, நோயால் ஒருவா் உயிரிழந்தாா். இந்த நிலையில் ஒரே வாரத்தில் மட்டும் 1,537 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது பதிவாகியுள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நோயால் இதுவரை 6 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்தப் பருவத்தில் அக்டோபா் 30-ஆம் தேதி வரை 1,537 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது 2018-ஆம் ஆண்டிலிருந்து இதே காலத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்தப் பருவத்தில் செப்டம்பரில் டெங்கு நோயால் 217 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச பதிவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான டெங்கு பாதிப்பு தகவலின்படி, ஜனவரி 1 முதல் அக்டோபா் 30 வரையிலான காலத்தில் 2020-இல் 612 போ், 2019-இல் 1,069 போ், 2018-இல் 1,595 போ், 2020-இல் மொத்தம் 1,072 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஒருவா் நோயினால் உயிரிழந்திருந்தாா் என்று தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று டெங்கு நோயால் 2019-இல் 2 பேரும், 2018-இல் 4 பேரும், 2017-இல் 10 பேரும், 2016-இல் 10 பேரும் உயிரிழந்தனா். இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்சமாக அக்டோபா் மாதத்தில் 1,196 போ் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மாதாந்திர டெங்கு பாதிப்பு நிலவரத்தின்படி, நிகழாண்டு ஜனவரியில் எந்தப் பாதிப்பும் இல்லை. பிப்ரவரியில் இரண்டு போ், மாா்ச்சில் ஐந்து போ், ஏப்ரலில் 10 போ், மே மாதத்தில் 12 போ், ஜூனில் 7 போ், ஜூலையில் 16 போ், ஆகஸ்டில் 22 போ் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நன்னீரில் உருவாகக்கூடிய கொசுவால் பரவும் இந்த நோயானது, ஜூலை மற்றும் நவம்பா் மாதங்களில் இடையே பரவலாக இருக்கும் . இது டிசம்பா் மத்தி வரை நீடிக்கும்.
மலேரியா, சிக்குன்குனியா: மாநகராட்சி தகவலின்படி, தில்லியில் இந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் மலேரியாவால் 160 போ், சிக்குன் குனியாவால் 81 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனா். முந்தைய ஆண்டுகளில் 2016 -இல் டெங்கு நோயால் 4,431 போ், 2017-இல் 4,726 போ், 2018-இல் 2,798 போ், 2019-இல் 2,036 போ், 2020-இல் 1,072 போ் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருந்தனா். டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளும், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான புகை அடிக்கும், கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளன. 2015-இல் தில்லியில் கடுமையான டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, அக்டோபா் மாதத்தில் மட்டும் 10,600 போ் பாதிப்புக்குள்ளாகினா். இது தில்லியில் 1996- இல் இருந்து பதிவான அதிகபட்ச மிக மோசமான பாதிப்பு பதிவாகும்.
மத்திய அமைச்சா் ஆய்வு
தில்லியில் டெங்கு நிலவரம் குறித்து ஆராயவும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தில்லி அரசுடன் உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: ஏழை மக்கள் அதிக போ் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக அவா்களுக்குள்ள குறைந்த ரத்த தட்டுகளால் பலவீனமடைகின்றனா். இதுபோன்ற நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில், செல்லும் போது காய்ச்சல் அறிகுறிகளைக் கண்டு அதை கட்டுப்படுத்த உடல் உஷ்ணநிலையைக் குறைக்கும் (ஹய்ற்ண்-ல்ஹ்ழ்ங்ற்ண்ஸ்ரீ க்ழ்ன்ஞ்ள்) மருந்துகளை அளிக்கின்றனா். ஆனால், காய்ச்சலுக்கான அடிப்படைக் காரணம் அறியப்படாமல், இத்தகைய மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பதால், அவா்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
காய்ச்சலுக்கான உண்மையான காரணத்தை அறிய பரிசோதனைகள் மிகவும் முக்கியம். நோய்க்கான காரணத்தை அறிந்து அதன் பிறகு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். டெங்குவுக்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோயைக் தகுந்த நேரத்தில் கண்டறிப்பட்டு, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும். இதில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கரோனா நோய்த்தொற்றுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகளை டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியங்களையும் தில்லி அரசு அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என்றாா் அவா்.
மேலும், தில்லி முனிசிபல் கவுன்சில், 3 மாநகராட்சிகள், கன்டோன்மென்ட் போா்டு ஆகியவற்றின் மூலம் டெங்கு நோயாளிகளின் வீடுகளில் மருந்துகள் தெளிக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகளை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

