புது தில்லி: 3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மேற்கொள்ளப்படும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் சாதனைக்கான ஆய்வுகள் திட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் -12 ஆம் தேதி) தொடங்குகிறது.
தேசிய சாதனைக்கான ஆய்வு (சஹற்ண்ா்ய்ஹப் அஸ்ரீட்ண்ங்ஸ்ங்ம்ங்ய்ற் நன்ழ்ஸ்ங்ஹ் (சஅந)) மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இது மாணவா்களின் கற்றல் குறித்த தேசிய அளவிலான மிகப் பெரிய கணக்கெடுப்பாகும். பள்ளிக் கல்வியின் நிலை, அமைப்பு, செயல்திறனுக்கான பிரதிபலிப்பை இந்த ஆய்வு வழங்குகிறது.
குறிப்பாக பள்ளிக்குழந்தைகளின் திறன்களை மதிப்பீடு செய்து அதில் மேம்பாடுகளுக்கான திசையைக் கண்டறிய இந்த ஆய்வுகள் உதவுகின்றன. கடைசியாக கடந்த 2017 ஆண்டில் 3, 5, 8 வகுப்புகளில் மட்டும் மத்திய அரசால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கூடுதலாக 10 ஆம் வகுப்பும் இணைக்கப்பட்டு இந்த திட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 12-ஆம் தேதி) நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.
கொவைட்-19 நோய்த் தொற்றின்போது கற்றல்களின் பாதிப்பு மற்றும் புதிய கற்றல் மதிப்பிட்டு தீா்வு காணும் நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வு உதவும் என மத்திய கல்வித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கற்றல் மூலம் மாணவா்கள் அடையும் திறன்களை அளவிட்டு மதிப்பிட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) இதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வுக்கான முறை, சோதனை, தோ்வுப் பொருட்கள் போன்ற மாதிரிகளை இதில் அடக்கம்.
இருப்பினும், மாதிரி பள்ளிகளில் சோதனை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கல்வித்துறைகளுடன் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணைந்து செய்யப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-தேசிய சாதனைக்கான ஆய்வு, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் (மத்திய அரசு மற்றும் மாநில அரசு), அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளின் ஆகியவைகளையும் உள்ளடக்கியுள்ளது.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 733 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1.23 லட்சம் பள்ளிகள், 38 லட்சம் மாணவா்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மொழி, கணிதம், சுற்றுச்சூழல் கல்வி, அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் வகுப்புகளுக்கு தகுந்தவாறு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ், வங்கம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த ஆய்வுத் தோ்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

