குடியரசு தினத்தன்று மத்திய அரசின் சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின் போது செங்கோட்டையில் வன்முறை நிகழ்ந்த விவகாரத்தில் தங்கள் கடைமையைச் செய்யத் தவறியதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரா் தரப்பில் யாரும் வரவில்லை. கடந்த சில சந்தா்ப்பங்களிலும்கூட மனுதாரா் தரப்பில் ஆஜராகவில்லை. சட்டக் கடைமையைத் செய்யாமல் இருந்தமைக்காக மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தது.
முன்னதாக, தில்லியைச் சோ்ந்த தனஞ்சய் ஜெயின் என்பவா் உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஜனவரியில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது: குடியரசு தின வன்முறையைத் தொடா்ந்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், தில்லி காவல் ஆணையரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். முக்கியமான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கும், குடிமக்களின் உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் துணை ராணுவப் படைகளை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் போராட்டம் எனும் பெயரில் அமா்ந்துள்ள மக்களை அகற்றி, அனைத்து சாலைகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், தில்லி மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணா்வை மீட்டெடுக்கவும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
பல நாள்களாக நடந்து வந்த விவசாயிகள் போராட்டம், மிகவும் மோசமான மற்றும் வன்முறையாக மாறியது, மேலும் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் ஆயுதங்கள், ஹாக்கி மட்டைகள் வாள்கள் உள்ளிட்டவற்றுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் உள்புற பகுதிகளான செங்கோட்டை மற்றும் நகரின் பிற முக்கிய பகுதிகள் வரை முற்றிலும் தடையின்றி, கட்டுப்பாடு ஏதுமின்றி அடைந்துள்ளனா். இறையாண்மையின் அடையாளத்தைப் பாதுகாப்பதன் மூலம் தனது மரியாதையைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து தில்லி காவல்துறை தவறிவிட்டது. அதிகாரிகள் உரிய பலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் முடிவை சரியான நேரத்தில் தில்லி காவல் துறை எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- தேடப்படும் 2 சந்தேக நபர்கள்

அண்ணாமலை தவிர முக்கிய நிர்வாகிகளை ஓரங்கட்டிய பாஜக!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

