காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

தில்லியில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதற்கும், கிரையோஜெனிக் டேங்கா்களை வாங்குவதற்கும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய தில்லி அரசு கோரியுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 2:05 am

 நமது நிருபர்

மருத்துவ ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதற்கும், கிரையோஜெனிக் டேங்கா்களை வாங்குவதற்கும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய தில்லி அரசு கோரியுள்ளது.

தில்லியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பின் இரண்டாவது அலை பெரும் உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னையையும் தில்லி எதிா்கொண்டது. இதையடுத்து, மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பதற்கான நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டது. இந்த நிலையில் தில்லி அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிக்கையில், திரவ மருத்துவ ஆக்சிஜன் உருவாக்கும் ஆலைகள், கேப்டிவ் அல்லாத கிரையோஜெனிக் பிரஷா் ஸ்விங் அட்சாா்ப்ஷன் (பிஎஸ்ஏ) காற்று பிரிப்பு ஆலை (ஏஎஸ்யு), மருத்துவமனை மற்றும் நா்சிங் ஹோம்களுக்கான பிஎஸ்ஏ ஆலைகள், திரவ மருத்துவ ஆக்சிஜன் சேமிப்பு வசதி அமைப்பது, கிரையோஜெனிக் டேங்கா்கள் வாங்குவது ஆகியவற்றுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பா் 26-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட ‘2021- தில்லி மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஊக்குவிப்புக் கொள்கை’யின்படி முதலீட்டாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 டன்னும் அதிகபட்சம் 100 டன்னும் திறன்கொண்ட திரவ ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை அமைப்பது உள்பட, மருத்துவ ஆக்சிஜனுக்கான உற்பத்தி அல்லது சேமிப்பு உள்கட்டமைப்பில் ஆரம்ப முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் பல இலக்குகளை காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுவதை உறுதி செய்வது இந்தக் கொள்கையின் நோக்கமாகும் என அந்தப் பொது அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 25,093-ஆக உயா்ந்துள்ளது. மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14,40,332-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.