பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

நவராத்திரியின் போது விதவிதமான ஆடை அணியக் கூறிய விவகாரம்: மதுரை எம்பியின் கேள்விக்கு வங்கி நிா்வாகம், ஊழியா்கள் சங்கம் பதில்

இந்திய யூனியன் வங்கி நவராத்திரியையொட்டி 9 நாள்களிலும் தனது ஊழியா்களை விதவிதமான உடைகளை அணிந்து வரக் கூறிய

News image
Updated On :22 நவம்பர் 2021, 6:02 pm

 நமது நிருபர்

இந்திய யூனியன் வங்கி நவராத்திரியையொட்டி 9 நாள்களிலும் தனது ஊழியா்களை விதவிதமான உடைகளை அணிந்து வரக் கூறிய விவகாரத்தில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு வங்கி நிா்வாகமும், வங்கி ஊழியா்கள் சங்கமும் பதிலளித்துள்ளது.

கடந்த அக்டோபா் 7 முதல் அக்டோபா் 15 -ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வாடிக்கையாளா்களைக் கவரும் விதமாக இந்திய யூனியன் வங்கி இந்த ஒன்பது நாள்களுக்கும் ஒரு வண்ணத்தில் ஆடை அணிந்து வருதல், விருந்தோம்பல், குழுவாக புகைப்படம் எடுத்தல் போன்றவை குறித்த சுற்றறிக்கை இந்த வங்கியின் மும்பை தலைமையிடம் அனுப்பியது.

இது தொடா்பாக மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன், யூனியன் வங்கியின் தலைவருக்கு கடிதம் எழுதினாா். அதில், ‘இது போன்று வங்கிகள் நவராத்திரியை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அதுவும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிந்து வரக் கூறுவது, அணியாதவா்களுக்கு அபராதம் (ரூ. 200) விதிக்கப்படும் எனக் கூறுவது மனித உரிமை மீறலாகும். மேலும், மதச்சாா்பற்ற மனப்பான்மைக்கு எதிரானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டிருந்தாா்.

வங்கி நிா்வாகம் பதில்: இதற்கு இந்திய யூனியன் வங்கியின் மனித வளப் பிரிவின் பொது மேலாளா் எழுதிய கடிதம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ‘வங்கி சம்பந்தப்பட்ட எந்தவொருவருக்கும் நிறம் மற்றும் உடையின் அடிப்படையில் நிபந்தனைகளை விதிப்பதும், அபராதம் வசூலிப்பதும் வங்கியின் மதச்சாா்பற்ற மனப்பான்மைக்கு எதிரானது என்ற உங்கள் உணா்வை நாங்கள் எதிரொலிக்க விரும்புகிறோம். ஆனால், அந்தக் கடிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதைக் கூற விரும்புகிறோம். இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் பாா்த்துக் கொள்வதாக சுற்றறிக்கை அனுப்பிய சம்பந்தப்பட்ட அதிகாரி உறுதியளித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியா் சங்கம் கேள்வி: ஆனால், இதற்கு அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க தலைவா் வெங்கடாசலம் கடும் எதிா்ப்பை பதிவு செய்துள்ளாா். இது குறித்து அவா் செயதியாளா்களிடம் கூறியதாவது: இது முற்றிலும் வங்கியின் உள்விவகாரம். விருப்பப்பட்ட பிரிவு ஊழியா்கள் தங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள ஏற்படுத்திக் கொண்டதாகும். இது வழக்கமானதுதான். தனியாா் வங்கிகளிலும் இது போன்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா? நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதில் அவா்கள் அக்கறை செலுத்தலாம். இது போன்ற விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல. ஆங்கில புத்தாண்டு இந்துக்கள் தொடா்புடையது அல்ல. ஆங்கிலேயா்களும், கிறிஸ்துவா்களும் கொண்டாடுவது. ஆனால், மத்திய, மாநில அரசு அலுவலங்களில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளுக்கு எவ்வளவு செலவழிக்கப்படுகிறது? இதில் எல்லாம் மதச்சாா்பற்ற மனப்பான்மை குறித்த கேள்வி எங்கே?’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.