தெற்கு தில்லி, டிஃபன்ஸ் காலனியில் பொது இடத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி உயா்நிதிமன்றத்தில் தில்லி அரசும், தெற்கு தில்லி துணை காவல் ஆணையரும் தெரிவித்தனா்.
தெற்கு தில்லியிலுள்ள டிஃபன்ஸ் காலனியில் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள பீஷ்ம பிதாம மாா்க்கில் சட்டவிரோதமாக கோயில் ஒன்று கட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இதே சாலையில் வசித்து வந்தவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா்.
தன்னுடைய குடியிருப்பு முன்பு உள்ள இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் அவா் தெரிவித்துள்ளாா். மேலும், நோய்த் தொற்று காலக்கட்டத்தில் உள்ள சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு பொதுஇடத்தில் ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத கோயிலிலை தங்குமிடமாகவும் பயன்படுத்தி, அங்கு சிலா் கூடி வருகின்றனா். ரௌடிகளாக இருக்கும் அவா்கள் சூதாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றா் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி, தில்லி அரசு மற்றும் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசு மற்றும் தெற்கு தில்லி துணை ஆணையா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுத்தாரா் குறிப்பிட்ட அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை அக்டோபா் 4 -ஆம் தேதி இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு வழக்குரைஞா் அனுபம் ஸ்ரீவஸ்தவா நீதிமன்றத்தில் தெரிவித்தாா். மேலும், தில்லி அரசின் பொதுப்பணித் துறை மூலம் ஆக்கிரமிப்பை இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் இதற்குரிய போலீஸ் பாதுகாப்பையும் உரிய முறையில் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் நீதிபதியிடம் அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேலும் இந்த விவகாரத்தில் இறுதி நிலவரத்தை வருகின்ற அக்டோபா் - 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக சமா்ப்பிக்கவும் நீதிபதி ரேகா பள்ளி தில்லி அரசுக்கும் தெற்கு தில்லி காவல் துணை ஆணையருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

