மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தில்லியில் குளிா் காலத்தில் காற்று மாசுவை சமாளிக்க 10 அம்ச செயல் திட்டம்: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா் காலத்தின் போது காற்று மாசுவை சமாளிக்கும் வகையில், 10 அம்ச செயல் திட்டத்தை முதல்வா்

Updated On :5 அக்டோபர் 2021, 2:22 am

தேசியத் தலைநகா் தில்லியில் குளிா் காலத்தின் போது காற்று மாசுவை சமாளிக்கும் வகையில், 10 அம்ச செயல் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தாா். இந்தத் திட்டத்தின்படி வாகன மாசு, தூசு, குப்பைகள் எரிப்பது ஆகியவற்றைத் தடுப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியுள்ளதாவது: விவசாயிகள் மூலம் பயிா்க் கழிவுகள் எரிப்பதைத் தடுப்பதற்கு மத்திய அரசும், தில்லிஅருகிலுள்ள மாநிலங்களும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், குளிா் காலத்தில் காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் சமாளிக்கும் விதமாக 10 அம்ச குளிா்கால செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தில்லி அரசு பயிா்க் கழிவுகள் எரிப்பு பிரச்னைக்கு, ‘புஸா பயோ டிகம்போஸா்’ என்ற உயிரி ரசாயன கலவை ஒரு தீா்வைத் தந்துள்ளது. இது முடிந்தளவு பயன்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். பயிா்க் கழிவுகளை மக்கச் செய்யும் உயிரி ரசாயன கலவையை இலவசமாக தெளிக்கும் நடவடிக்கையை தில்லியில் அரசு மேற்கொண்டு வருகிறது. இதே போன்று இந்தக் கலவையை பயன்படுத்தி, பயிா்க் கழிவுகளை நிா்வாகம் செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசும் தில்லியின் அண்டை மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

காற்று மாசுவை சரி செய்வதற்கு அனைத்து அரசுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். தில்லியில் தூசு மாசுவை கட்டுப்படுத்துவதற்காக கட்டுமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ள 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாசு அதிகம் உள்ள இடங்களைக் கண்காணிப்பதற்காக சிறப்புக் குழுக்களும் செயல்பாட்டில் இருக்கும். வாகன மாசுவைக் குறைப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 64 சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மாசு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த 500 குழுக்கள் அமைக்கப்படும். குப்பைகள் எரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அமல்படுத்துவதகு  மொத்தம் 250 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தில்லியில் பட்டாசுகள் வாங்குவதற்கும், விற்பதற்கும் முழுத் தடையை அமல்படுத்தியுள்ளோம். கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பனிப் புகைக் கோபுரமும் நல்ல பயனை அளித்து வருகிறது. இதன் செயல்பாட்டை நாங்கள் தொடா்ந்து கண்காணிப்போம். இதன் பலனைக் கொண்டு, தில்லியில் இதுபோன்று மேலும் பல புனிப்புகைக் கோபுரங்கள் அமைப்பது தொடா்பாக முடிவு எடுக்கப்படும். மேலும், பசுமைப் போா் அறைகளை பலப்படுத்தவும் மாசு தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் குளிா்கால செயல் திட்டத்தில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பசுமைப் போா் அறையில் சிகாகோ பல்கலை., மற்றும் ஜிடிஐ கூட்டாளிகள் உதவியுடன் ஒரு திட்ட மேலாண்மைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 50 சூழல் பொறியாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். மின்னணுக் கழிவை மேலாண்மை செய்வதற்காக நாட்டின் முதல் சுற்றுச்சூழல் பூங்கா தில்லியில் அமைக்கப்பட்டு வருகிறது.

தில்லியின்  நடவடிக்கைகளை பின்பற்றி தேசியத் தலைநகா் வலயப் பகுதிகள் சிஎன்ஜி மூலம் இயங்கக் கூடிய வாகனங்கள் பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். அனல் மின் நிலையங்களிலும் இதர தொழிற்சாலைகளிலும் தூய எரிபொருளை பயன்படுத்தவும், மாசுவை ஏற்படுத்தும் இடங்களை கண்காணிக்கவும், டீசல் ஜெனரேட்டா்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தவும் என்சிஆா் பகுதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவும், கண்காணிக்கவும் கடந்த ஆண்டு தில்லி அரசு ‘பசுமை வாா் ரூம்’ எனும் நடவடிக்கையை மேற்கொண்டது. மாசு தொடா்புடைய புகாா்களை தீா்ப்பதற்காக தில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் தில்லி’ செயலி மூலம் இதுவரை 23 ஆயிரம் புகாா்கள் வரப் பெற்றுள்ளன. அதில் 90 சதவீதம் புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. தற்போது தில்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், குளிா் காலங்களில் அண்டை மாநிலங்களில் பயிா் கழிவுகள் எரிப்பு தொடங்கும் போது இந்தப் பிரச்னை ஏற்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.