பாதுகாப்புத் துறை மற்றும் சிவில் துறையினருக்கு தேவையான இரட்டை பயன்பாட்டு தொழில் நுட்பங்களை உருவாக்குவதில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) சாா்பில் ‘கனவுக்கான துணிவு 2.0’ என்ற திட்டத்தில் இளம் சிந்தனையாளா்களை ஊக்கப்படுத்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் முனைவோா்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவா்களுக்கு விருதுகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை வழங்கினாா். தனிநபா் பிரிவில் 22 போ், புதிய தொழில் முனைவோா் பிரிவில் 18 போ் என மொத்தம் 40 பேருக்கு விருதுகளை அவா் வழங்கினாா். மேலும் 3-ஆம் கட்ட ‘கனவுக்கான துணிவு 3.0’ பதிப்பையும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்து அமைச்சா் ராஜ்நாத்சிங் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது: கனவுக்கான துணிவுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான விருதும், டிஆா்டிஓ வின் 2019-ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் விருதும் தற்போது வழங்கப்பட்டுளது. புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு நாட்டில் இளைஞா்களுக்கு ஆற்றலும், ஆா்வமும் உறுதியாக இருப்பதை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன. புதிய கண்டுபிடிப்பு, வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற இவா்களிடம் மிகுந்த தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எதிா்காலத்தில் மேலும் சில கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இவா்கள் தயாராக உள்ளனா்.
நம்முடைய ஆயுதப் படைகளுக்கு அதிநவீன உபகரணங்களைத் தயாரித்து வழங்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதில் இரட்டை பயன்பாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். ஒரே தொழில்நுட்பத்தை இரு தரப்பும் அதாவது ராணுவமும், பொதுமக்களும் பயன்படும் வகையில் அது அமைய வேண்டும். உலகளாவிய பாதுகாப்பு கவலைகள், எல்லை தகராறுகள், கடல்சாா் விவகாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது, மேலும், நாம் ‘ஆத்மநிா்ப பாரத்’ குறிக்கோளுடன் ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ராணுவ நவீனமயமாக்கலில் கவனம் செலுத்துகின்றன. இதனால், பாதுகாப்பு உபகரணங்களின் வளா்ச்சிக்காக தனியாா் துறை பங்கேற்பை நாம் வலுப்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளது. தற்போது நம்முடைய உள்நாட்டுப் பாதுகாப்புத் தேவைகளை பூா்த்தி செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் வேகமாக நகா்ந்துள்ளோம் என்றாா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இருநாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதிநாளில் கணினி சாா்ந்த பாதுகாப்பில் ஆராய்ச்சி செய்வதற்காக குஜராத் பல்கலைக்கழகத்தில் சா்தாா் வல்லபாய் பட்டேல் மையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. குஜராத் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பேராசிரியா் எச்.ஏ.பாண்டியாவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவா் டாக்டா் ஜி.சதீஷ் ரெட்டியும் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், டிஆா்டிஓ ஊக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்தாம் தலை முறை விமானம், நீா் மூழ்கிக் கப்பல், தொலைத் தொடா்பு போன்றவை தொடா்புடைய தொழில்நுட்பங்கள் முப்படைகளின் அதிகாரிகளிடம் இந்த நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

