மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தில்லி மருத்துவமனைகளில் 27 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடக்கம்

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On :6 அக்டோபர் 2021, 6:40 pm

புது தில்லி: தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை தில்லி அரசு தொடங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், தில்லியில் கரோனா மூன்றாவது நோய்த் தொற்று அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மூன்று ‘பிரசா் ஸ்விங் அப்சாா்ப்ஷன்’ (பிஎஸ்ஏ) ஆக்சிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்கி வைத்தாா். இந்த ஆக்சிஜன் மையங்கள் 3.28 கொள்திறன் கொண்டவை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வடமேற்கு தில்லியில் உள்ள பகவான் மகாவீா் மருத்துவமனையில் 1.80 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தையும் அவா் தொடங்கி வைத்தாா் .

இதன் பின்னா் அவா் சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ தில்லி அரசு, நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 27 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கியுள்ளது. தில்லியில் கரோனா நோய்த் தொற்று மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான தொடா் செயல்பாட்டு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் தில்லி முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான பணியாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா 2-ஆவது  அலை உச்சத்தில் இருந்த போது, தில்லி பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. இது போன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், நாளொன்றுக்கு 37 ஆயிரம் பேரை மருத்துவமனையில் சோ்க்கும் அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தில்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தை பொறுத்த வரையில், சுயச் சாா்புத் தன்மை மிக்கதாக தில்லியை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தில்லியில் ஷாலிமாா் பாக், கிடாரி சரிதா விகாா் சுல்தான் பூரி ரகுவீா் நகா், ஜிடிபி மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள அரசு சுகாதார கவனிப்பு வசதிகளில் 7,000 ஐசியு படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தில்லியில் தற்போது மருத்துவமனையில் பத்தாயிரம் ஐசியு படுக்கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: அதில் கலன் என்பதை மையம் என திருத்திக் கொள்ளவும். திருத்தப்பட்ட கேப்ஷனும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.