தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தூசு கட்டுப்பாட்டு விதிகளை சுயமாக மதிப்பிட இணையதளத்தைத் தொடங்கியது தில்லி அரசு

தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு செயல்பாடுகள் நடைபெறும் இடங்களில் தூசு கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான

Updated On :8 அக்டோபர் 2021, 1:59 am

தில்லியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு செயல்பாடுகள் நடைபெறும் இடங்களில் தூசு கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான சுய கண்காணிப்புகான இணையதளத்தை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

  இது தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: இந்த இணையதளம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் மாசு தடுப்பு பிரசாரத்தை தில்லி அரசு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. இந்தப் பிரசாரம் இந்த மாதம் 29-ஆம் தேதி வரை தொடரும்.  தில்லியில் உள்ள அனைத்து கட்டுமான இடங்களிலும் ஆள்கள் மூலம் கண்காணிப்பு செய்வது என்பது கடினமான பணியாகும். இதனால், இது போன்ற அனைத்து இடங்களையும் இணையதளம் வாயிலாக கொண்டுவர முயற்சிப்போம்.  திட்ட முன்மொழிவாளா்கள் தூசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுவதற்கான சுய தணிக்கை செய்ய வேண்டும்.  அது தொடா்பான அறிவிப்பை இரு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து திட்ட முன்மொழிவாளா்களும் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.  சுய மதிப்பீட்டின் அடிப்படையில் திட்ட முன்மொழிவாளா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.   இந்த இணையதளம் மூலமாகவே, விதிமீறலில் ஈடுபடும் நபா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.  மேலும், ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டால் அந்த அபராதத்தை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு இந்த இணைய தளத்தை கையாள்வது தொடா்பான பயிற்சியை அடுத்த வாரம் முதல் தில்லி அரசு மேற்கொள்ளும்.  இந்தப் பயிற்சி அக்டோபா் இறுதிக்குள் முடிக்கப்படும்.  தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு இந்த இணையதளம் மூலமாக நவம்பா் 1-ஆம் தேதியிலிருந்து அனைத்து கட்டுமான இடங்களிலும் தூசு கட்டுப்பாட்டு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்கும் பணியை தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.