தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரம்: நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை

Updated On :8 அக்டோபர் 2021, 1:56 am

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தத் தவறியதாக அந்த மாவட்ட ஆட்சியா், வனத் துறை உயரதிகாரி ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுதி, உணவகங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால், யானைகளின் வாழ்வாதார உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன், 2009-இல் வழக்குத் தொடுத்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் யானைகள் வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து பாதிக்கப்பட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. எனினும், சில உத்தரவுகளை இடைப்பட்ட காலத்தில் பிறப்பித்திருந்தது.

அதன்பிறகு, இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபா் 14-இல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு தீா்ப்பு அளித்தது. அதில், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அத்துடன், ரிசாா்ட்டுகளை சீலிடும் நடவடிக்கையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் தன்னிச்சையாக செயல்பட்டதாக மேல்முறையீட்டு மனுதாரா்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளதன் உண்மைத் தன்மையை அறிய விசாரணை நடத்துவதற்காக 3 உறுப்பினா்கள் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை நீலகிரி மாவட்ட ஆட்சியரும், வனத் துறைச் செயலரும் செயல்படுத்தவில்லை எனக் கூறி, வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உயா்நீதிமன்ற அளித்த தீா்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பு அளித்திருந்தது. அந்தத் தீா்ப்பை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரமைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.