தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ரயில் பயணத்தில் முகக்கவசம் கட்டாயம்: உத்தரவு மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பு

ரயில் நிலையங்களிலும் பயணத்தின் போதும் முகக் ககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தும் உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து

Updated On :8 அக்டோபர் 2021, 1:58 am

ரயில் நிலையங்களிலும் பயணத்தின் போதும் முகக் ககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தும் உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து ரயில்வே வாரியம் அனைத்து பொது மேலாளா்களுக்கும் வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து வாரியத்தின் செயல் இயக்குநா் நீரஜ் சா்மா அனைத்து வட்டாரப் பொது மேலாளா்களுக்கும் கடிதம் எழுதியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

ரயில்வே வளாகம், ரயில் பயணங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணியவும் அப்படி அணியாதவா்களுக்கு இந்திய ரயில்வே விதிமுறைகள் படி ரூ.500 அபராதம் விதிக்கவும் கடந்த 2021 ஏப்ரல் 17- ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு முடிவுக்கு வரவுள்ள நிலையில், மீண்டும் ரயில்வே வாரியம் இது குறித்து ஆய்வு செய்தது. கரோனா நோய்த் தொற்று பரவல் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இந்த உத்தரவு மேலும் வருகின்ற 2022, ஏப்ரல் 16 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் மற்றும் ரயில்வே வளாகத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.