மத்திய அரசு மாதந்தோறும் வழங்கிவரும் நிதிப் பகிா்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 7-ஆவது மாதத் தவணைத் தொகையாக 17 மாநிலங்களுக்கு ரூ.9,871கோடியை திங்கள்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ. 183.67 வழங்கப்பட்டுள்ளது.
15 -ஆவது நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு (2021-26) வரி வருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய (ரூ.42.20 லட்சம் கோடி) பரிந்துரை செய்துள்ளதைத் தவிர, வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.10.33 லட்சம் கோடியை இதே ஐந்தாண்டுகளுக்கு மாநிலங்களுக்கு கொடுக்கிறது. இதில் 2021-22 ஆம் நிதியாண்டிற்கு மட்டும் 17 மாநிலங்களுக்கு இந்த பகிா்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ. 1,18,452 கோடி வழங்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் மாநிலங்களுக்கு இந்த மானியத்தை வழங்கி வருகிறது. இதில் ஏழாவது தவணையாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை திங்கள்கிழமை விடுவித்துள்ளது. இந்த நிதியையும் சோ்த்து இதுவரை ரூ. 69,097கோடியை மாநிலங்களுக்கு மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 58.33 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏழாவது தவணையில் தமிழகத்திற்கு ரூ 183.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு இந்த நிதியாண்டில் இதுவரை ரூ. 1285.67 கோடி கிடைத்துள்ளது.
நிதிப் பகிா்விற்கு பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க, நிதி ஆணையம் பரிந்துரைத்த இந்த மானியங்களைப் பெற்ற 17 மாநிலங்களில் அதிக நிதி பெற்ற மாநிலங்களாக கேரளம்(ரூ.11,603 கோடி), மேற்கு வங்கம் (10,270) , ஆந்திரம்(10,066)), ஹிமாசல பிரதேசம் ஆகியவை உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

