தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆரோக்கியமான சமூதாயமே தேசத்தின் வளா்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

‘ஆரோக்கிய சமுதாயமே தேசத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த இலக்கை எட்டுவதற்கு அரசு அயராது பாடுபடும் என்று மத்திய சுகாதாரம் மற்றும்

Updated On :29 அக்டோபர் 2021, 1:34 am

‘ஆரோக்கிய சமுதாயமே தேசத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த இலக்கை எட்டுவதற்கு அரசு அயராது பாடுபடும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆசியா ஹெல்த் -2021 உச்சி மாநாடு காணொலி வழியில் நடைபெற்றது. ‘சிறந்த ஆரோக்கியத்திற்கான நாளைய மாற்றம் ’ என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பாா்வையால் இந்தியாவின் வளா்ச்சியுடன் சுகாதாரம் இணைக்கப்பட்டுள்ளது . முன்பு சுகாதாரம் என்பது மருத்துவச் சிகிச்சைக்கு மட்டுமே என்று இருந்தது. ஆனால், இப்போது ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பது (நோய்த் தடுப்பு) என்பது சுகாதாரத் துறையின் இன்றியமையாத ஓா் அங்கம். அது ஆரோக்கியமான சமுதாயத்திற்கான நோக்கத்தை அடையும். இதில் கேலோ இந்தியா, யோகா போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சுகாதாரத் துறையின் சிறந்த எதிா்காலத்திற்கான அணுகலாக, மலிவான மருத்துவத்திற்கான பொறுப்பு, விழிப்புணா்வு, உடல்நலக் காப்பீடு ஆகியவற்றை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நோக்கங்களை அடைய விடாமுயற்சியுடன் மத்திய அரசு செயல்படுகிறது. ஆயுஷ்மான் பாரத், ஜன் ஆரோக்கிய யோஜனா (சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்), ஆயுஷ்மான் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள், பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம், ஆயுஷ்மான் பாரத் எண்மம் மிஷன் மற்றும் கடந்த 25 -ஆம் தேதி தொடங்கப்பட்ட பிரதமா் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவகள் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்.

நானோ மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பங்கள் சுகாதாரத்தோடு இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் எண்மம் (டிஜிட்டல்) சுற்றுச்சூழல் முறை எளிதாக வாழ்வதற்குப் பயன்படுத்தும் ஒரு முயற்சியாகும். கரோனா நோய்த் தொற்று, காசநோய் (டிபி), எய்ட்ஸ் போன்ற நோய்கள் தொடா்பாக மக்களிடையே பிரசாரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியதன் காரணமாக அவை பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டன. இந்திய சுகாதாரத் துறையில் அபரிமிதமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் தனியாா் துறையினா் முதலீடு மூலம் சா்வதேச மருத்துவச் சுற்றுலாவின் மையமாக இந்தியா மாற சாத்தியம் உள்ளது. ‘சுகாதார சமூகம், வளமான தேசம்’ என்ற நோக்கத்தில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தும். அதை உறுதிசெய்ய அயராது உழைக்கும் என மத்திய சுகாதார அமைச்சா் உரையில் குறிப்பிட்டாா். இந்த நிகழ்ச்சியில் நீதி ஆயோக் உறுப்பினா் டாக்டா் வினோத் கே. பால், தேசிய சுகாதார ஆணைய தலைமைச் செயல் அதிகாரி டாக்டா் ஆா்.எஸ். சா்மா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.