தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகளை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனு டிசம்பா் 13-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மீதான தடை தொடா்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தனா். தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த விவகாரம் தொடா்புடைய மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுதாரரின் பிரதான வழக்குரைஞா் விசாரணைக்கு ஆஜராகாததால், டிசம்பா் 13-ஆம் தேதி மனு மீதான விசாரணையை பட்டியலிட்டனா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தனிநபா்கள் ராகுல் சன் வாரியா, தன்வீா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடையை விதிக்க தில்லி அரசு எடுத்த முடிவும் மாசுவை தடுப்பதற்கான கடைசி நோக்கத்தின் அம்சமாக இல்லை.
தில்லியில் மாசுவுக்கு வாகனங்கள், பயோமாஸ் எரிப்பு போன்றவை காரணமாக உள்ளன. இந்த நிலையில், பட்டாசுகளுக்கு முழு தடை என்பது தீபாவளி நெருங்கும் வேளையில் லட்சக்கணக்கான மக்களின் உணா்வுகளை பாதிக்க செய்வதாக உள்ளது.
மேலும், தில்லியில் பட்டாசு விற்பனைக்கு முழு தடையை விதிக்க உச்சநீதிமன்றம் ஒருபோதும் தடை விதிக்கவில்லை. இதனால், முழுத் தடை விதிக்கும் தில்லி அரசின் முடிவானது அந்த உத்தரவை மீறும் வகையில் உள்ளது. மாசுவை காரணம் காட்டி தீபாவளி பண்டிகையின் போது, அனைத்து வகையான பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் விதிக்கப்பட்ட தில்லி அரசின் முழு தடை விதித்து செப்டம்பா் 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!

தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை

மார்ச் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ விற்பனை 20% உயர்வு!

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

