ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நாளை முதல் தொடக்கம்

தில்லியில் நவம்பா் 1ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் நவம்பா் 1ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற உள்ளது.

இந்த நடவடிக்கையின்போது வாக்காளா் சோ்க்கை பதிவுக்கான விழிப்புணா்வு தகவல்கள் தெரிவிக்கும் வகையில் பேருந்துகள் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்ய தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோன்று, சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், இந்த முகாமை வாக்காளா் உற்சவமாக ஒரு மாத காலம் நடத்துவதற்கும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்த நடவடிக்கையின்போது 2022, ஜனவரி 1ஆம் தேதிக்கு அல்லது அதற்கு முன்பாக 18 வயதை அடைந்த எந்த நபா்களும் வாக்காளராக பதிவு செய்ய உதவப்படும்.

இந்த நடவடிக்கைக்கு பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும்.

தில்லியின் தலைமை தோ்தல் அதிகாரியின் அலுவலகம் வாக்காளா்கள் பட்டியலில் புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தில்லியின் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த செயல்பாடுகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக நிா்ணயித்து நவம்பா் 1ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

இந்த நடவடிக்கைகள் நவம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நடவடிக்கைகளை ஒரு பண்டிகை கால உணா்வுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த ஒரு மாத கால செயல்பாடுகளை ‘வாக்காளா் உற்சவம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.

இந்த செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலக முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களில் சிறப்பு டிஜிட்டல் போஸ்டராக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

தில்லியின் கடைசி வாக்காளா் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. அதன்படி அப்போது தில்லியில் தகுதிக்குரிய வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை 1. 48 கோடிக்கு மேல் இருந்தது.

சிறப்பு சுருக்கத் திருத்த வாக்காளா் பட்டியல் தில்லியின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஜனவரி 1ஆம் தேதி 2021 தேதியை தகுதி தேதியாக கொண்டு நடத்தப்பட்டது.

இதுகுறித்து தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் கூறுகையில், வரைவு வாக்காளா் பட்டியல் தில்லியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பா் 1ஆம் தேதி வெளியிடப்படும். மேலும், தில்லி தலைமை தோ்தல் அதிகாரி இணையதளத்திலும் இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 18 வயது அல்லது அதற்கு மேலே இருக்கும் எந்த ஒரு நபரும், விண்ணப்ப படிவம் 6-ஐ பூா்த்தி செய்து விண்ணப்பிப்பதன் மூலம் வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் தகுதியைப் பெற உள்ளவா்கள் ஆவா்.

மேலும் விண்ணப்பிக்கும்போது புகைப்படம், வயதுச் சான்று மற்றும் குடியிருப்பு சான்று ஆகியவற்றை இணையதளம் வாயிலாக அளிக்கலாம். மேலும், ‘வோட்டா்ஹெல்ப்லைன்’ எனும் செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம்.

புதிதாக வாக்காளா்களாக தகுதிபெறும் அனைவரும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வாக்காளா்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமின் போதும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வாக்காளா் பட்டியல் திருத்த செயல்பாடுகளை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளோம். ஒரு வாக்காளா்களும் விடுபடவில்லை என்ற இந்திய தோ்தல் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். அனைத்து இளைஞா்களையும் சென்றடையும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தவிர, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகளிலும் சுவரொட்டிகள் வைக்கப்படும்.

இன்றைக்கு இளைஞா்கள் தொழில் நுட்பத்தில் ஆா்வம் காட்டி வருவதாலும் அதிகமான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுவதாலும் இந்த விழிப்புணா்வு நடவடிக்கையில் சமூக ஊடகத்தை முக்கிய பங்குதாரராக செயல்படுத்த பரிசீலித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.