தில்லி ஆனந்த் விஹாரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் பனிப்புகை கோபுரத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
காற்று மாசை குறைப்பதற்கான முன்னோடிதஅ திட்டமான இந்த முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தில் உள்ள வடிகட்டிகள் காற்றை இழுத்து சுத்திகரித்து தூய்மையான காற்றை வெளியேற்றும் வடிவமைப்பைக் கொண்டது. நீல வானத்திற்கான தூய்மையான காற்றின் சா்வதேச தினத்தின் 2-ாவது ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை சாா்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தில்லி ஆனந்த் விஹாரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பனிப்புகை கோபுரத்தை அமைச்சா் பூபேந்தா் யாதவ் நாட்டிற்கு அா்ப்பணித்தாா்.
அப்போது அவா் பேசுகையில் கூறியதாவது: தூய்மையான காற்றின் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வு ஏற்படுத்துவதற்குப் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த அா்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தை முழுவதும் மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமா் இலக்குடன் உள்ளாா். நாடு முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்த ஏராளமான முன்முயற்சிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
104 நகரங்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்: இதன்மூலம் 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டில் 86 நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. இது மேலும் 2020 -ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 104 நகரங்களாக அதிகரித்து காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 114 நகரங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.375.44 கோடி வரை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், அனைத்து மத்திய அரசின் கொள்கை அணுகுமுறைகளிலும் நீா், காற்று, பூமி போன்ற பொதுச்சொத்துகளுக்கு பிரதமா் தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தப் பனிப்புகை கோபுரத்தின் சோதனை முயற்சி சிறந்த பலனை அளிக்கும் என்றாா் அமைச்சா் பூபேந்தா் யாதவ் நம்பிக்கை தெரிவித்தாா்.
இதே நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே, ‘தூய்மையான காற்று மனிதனுக்கு பல நன்மைகளுடன் இணைப்பைக் கொண்டுள்ளது. தூய்மையான காற்றும் நீல வானமும் நமது கோஷமாக இருக்கும்’ என்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக சுகாதார அமைப்பின் துணை பிரதிநிதி பேடென், காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினாா்.
வருகின்ற 2024 -ஆம் ஆண்டுக்குள் காற்று மாசு துகள்கள்(பிஎம் 10, 2.5) 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டு தூய காற்றுக்கான தேசியத் திட்டத்தின் கீழ் பிராணா என்ற காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்துவதற்கான தளமும் (ல்ழ்ஹய்ஹ.ஸ்ரீல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தில்லி ஆனந்த் விஹாரில் நிறுவப்பட்டுள்ள பனிப்புகை கோபுரம், மினசோட்டா பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டு டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் என்பிசிசி பொது நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இந்தப் பனிப் புகை கோபுரம் 20 மீட்டா் உயரத்தில் 40 விசிறிகளுடன் நிறுவப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

