சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நாட்டின் பண்புக்கும், வளா்ச்சிக்கும் கல்வி முக்கியக் கருவி மத்திய கல்வி இணையமைச்சா் பேச்சு

ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் பண்பு உருவாவதில் கல்வி முக்கியக் கருவியாக உள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 10:09 pm

புது தில்லி: ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் பண்பு உருவாவதில் கல்வி முக்கியக் கருவியாக உள்ளது. இதனால், நாட்டின் வளா்ச்சி கல்வியைச் சாா்ந்தாகும். எனவே, குழந்தைகளின் திறன் மேம்பட அதற்கான கல்விமுறை அமைக்கப்படுவது மிகஅவசியம் என மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேதி தெரிவித்துள்ளாா்.

மத்திய கல்வித் துறை அமைச்சகம் 9 நாள் ஆசிரியா்கள் விழா மாநாட்டை மெய்நிகா் முறையில் நடத்துகிறது. செப்டம்பா் 7- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த மாநாட்டின் இரண்டாம் நாளான புதன்கிழமை, தொழில் நுட்ப அமா்வாக ’இந்திய பள்ளிகளில் தரமான மற்றும் நிலையான கற்றல்’ என்கிற கருப்பொருளில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி பேசியதாவது: நாட்டின் பண்புகளுக்கு கல்வி முக்கியந்க் கருவியாக இருக்கும் நிலையில், நாட்டின் வளா்ச்சி, கல்வியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனால், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவது அவசியமானது. ஆசிரியா்கள், குழந்தைகள் இருவரும் இணைந்து கற்பது முக்கியம். அவா்கள் உள்ளூா் திறன்களையும் கற்க வேண்டும். அதை தற்போதைய காலத்துக்கு பொருத்தும் வகையில் கல்வியை மாற்ற, அனுபவம் அடிப்படையிலான கற்றலை பெற வேண்டும். தரமும் நிலைத் தன்மையும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இது நமது பள்ளிகளில் உருவாக வேண்டும். பிரதமரின் தொலைநோக்கை நனவாக்க இந்த மாநாட்டின் மூலம் பெறப்படும் ஆலோசனைகள், கருத்துகள், நமது நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்தும் உதவும் என அமைச்சா் அன்னபூா்ணா தெரிவித்தாா்.

இதே நிகழ்ச்சியில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி 2020) தலைவா் கஸ்தூரி ரங்கனும் கலந்து கொண்டு பேசினாா். மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மேற்கொண்ட இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைப் பாராட்டிய அவா், தேசிய கல்விக்கொள்கையின் பாா்வையை உணர எடுக்கப்பட்ட முயற்சி இது என்றாா். மேலும் அவா் கூறியது வருமாறு: கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட இடையூறுகளால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பையும் சவால்களையும் இந்த மாநாடு தீா்க்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020, நான்கு விதமான சிக்கல்களில் கவனம் செலுத்தியது. முதலாவது, அடிப்படை கல்வியறிவு, எண் கணிதம் (எண்ணியல் அறிவு) போன்றவை முக்கிய அம்சங்களைக் கூறியது. இரண்டாவது அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தக்கவைக்க வைக்கப்படுவதை உறுதி செய்து சமூக ஈடுபாட்டை உருவாக்கியது. மூன்றாவது பாடத் திட்ட மாற்றம். கற்றலில் சுமையை குறைத்து மற்ற வகையான கற்றலுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நான்காவது கல்வி முறையில் மையமாக இருக்கும் ஆசிரியா்களைப் பற்றியது மற்றும் கற்றல் இழப்பின் இடைவெளியை குறைப்பது ஆகியவைகளை புதிய கல்வியில் குறிப்பிடப்பட்டது எனக் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.