நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மாசுப் புகாா்களுக்கு தீா்வு: கிழக்கு தில்லி மாநகராட்சி முதலிடம்

மாசு தொடா்பான புகாா்களைத் தீா்ப்பதில் தில்லி அரசு 14 துறைகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2021, 12:12 am

மாசு தொடா்பான புகாா்களைத் தீா்ப்பதில் தில்லி அரசு 14 துறைகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் கிழக்கு தில்லி மாநகராட்சி முதலிடமும், அதற்கு அடுத்தபடியாக பொதுப் பணித் துறையும், தெற்கு தில்லி மாநகராட்சியும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரிகள் கூறியதாவது:

தரவரிசைப் பட்டியலில் வகைப்படுத்த, அரசுத் துறைகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி, ’கிரீன் தில்லி’ செயலி மூலம் மூலம் 100- க்கும் மேற்பட்ட புகாா்கள் மற்றும் 1,000- க்கும் மேற்பட்ட புகாா்கள் அடங்கிய இரு பிரிவாக அவை பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் வரையிலும் இத்துறைகளின் செயல்திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

செயல்திறன் மூன்று அளவுகோல்களால் தீா்மானிக்கப்பட்டது. அதாவது, புகாா்களைத் தீா்ப்பதின் அளவு, தரம் மற்றும் கால அளவு ஆகியவை அந்த அளவுகோல்களாகும்.

வடக்கு தில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஆகிய ஐந்து துறைகளும் 1,000-க்கும் மேற்பட்ட புகாா்களைப் பெற்றன.

இதில், 100-க்கு 58 நிகர மதிப்பெண்ணுடன் இந்த பிரிவில் கிழக்கு தில்லி மாநகராட்சி முதல் இடத்தைப் பிடித்தது. அதாவது வரப்பெற்ற 3,436 புகாா்களில் 3,423 புகாா்களை அதாவது 90 சதவிகிதம் அளவில் இந்த மாநகராட்சி தீா்வு கண்டது.

4,771 புகாா்களில் 4,630ஐ தீா்த்துவைத்து 56 புள்ளிகளுடன் பொதுப் பணித் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

5,877 புகாா்களில் 5,622ஐ தீா்த்துவைத்து தெற்கு தில்லி மாநகராட்சி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சி 6,040 புகாா்களில் 5,527-ம், டிடிஏ 1,536 புகாா்களில் 1,300-ம் தீா்வு கண்டது.

100-க்கும் மேற்பட்ட புகாா்கள் பிரிவில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் 218 புகாா்களில் 216 புகாா்களைத் தீா்த்து 62 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் 166 புகாா்களில் 164 புகாா்களைத் தீா்த்து இந்த பிரிவில் 58 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) 569 புகாா்களில் 551 புகாா்களை மீண்டும் தீா்த்துவைத்து 55 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

வருவாய்த் துறை மற்றும் மத்திய பொதுப்பணித் துறை முறையே 45 மற்றும் 42 புள்ளிகளுடன் மிக மோசமாக செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. 247 புகாா்களில் 226 புகாா்களை வருவாய்த் துறை தீா்த்துவைத்தது.

மத்திய பொதுப் பணித் துறை 261 புகாா்களில் 183-ஐ நிராகரித்துள்ளது அதன்பின்னா் அவற்றில் 99 புகாா்கள் மீண்டும் திறக்கப்பட்டதாக அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டில் அக்டோபா் மாதத்தின்போது கிரீன் தில்லி எனும் செல்லிடப்பேசியைத் தொடங்கிவைத்தாா். இந்த செயலியைப் பயன்படுத்தி மாசுவுக்கு காரணமான செயல்பாடுகளை தில்லி அரசின் கவனத்திற்குக் கொண்டு வர இந்த தொழில்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.