‘தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 0.4% மட்டுமே’: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை பல மாநிலங்களில் குறைந்து வரும் நிலையில், தில்லியில் நாள்தோறும் 50 பேருக்கும் குறைவான பாதிப்பே பதிவாகி வருகின்றன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சத்யேந்தர் ஜெயின் பேசியது:

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கரோனா உறுதியாகும் விகிதம் 0.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், அடுத்த 6 மாதங்களில் 2,800 தீவிர சிகிச்சை படுக்கைகளை 7 மருத்துவமனைகளில் உருவாக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com