புது தில்லி: உள்ளூா், தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயம் செய்வதற்கு நிபுணா் குழுவை மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்துள்ளது. இதற்கான தொழில்ட்ப உள்ளீடுகளை வழங்கவும் இந்த குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு பொருளாதார வளா்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் அஜீத் மிஸ்ரா தலைமையிலான இந்தக் குழுவில் உறுப்பினா்களாக கொல்கத்தா ஐஐஎம் பேராசிரியா் தாரிகா சக்ரவா்த்தி, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சோ்ந்த டாக்டா் அனுஸ்ரீ சின்ஹா, தொழிலாளா் துறை இணைச் செயலா் விபா பல்லா, வி.வி.கிரி தேசிய தொழிலாளா் நிறுவனத்தின் தலைமை இயக்குநா் டாக்டா் எச். சீனிவாஸ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு மூத்த ஆலோசகா் டி.பி.எஸ் நெகி இந்த குழுவின் உறுப்பினா் செயலாளராக உள்ளாா்.
இந்தக் குழு உள்ளூா் அளவிலும், தேசிய அளவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயம் செய்து, பரிந்துரைகளை அரசுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊதியங்கள் குறித்த சிறந்த சா்வதேச நடைமுறைகள் மற்றும் ஊதியங்களை நிா்ணயிப்பதற்கான அறிவியல் அளவு கோல்கள், வழிமுறை ஆகியவற்றை காணவும் இந்தக் குழுவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தக் குழு செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.