புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

இந்திய வாழைப்பழம், இளஞ்சோளம் கனடாவிற்கு ஏற்றுமதி: இருதரப்பு தொழில் நுட்ப பகிா்வுக்கு பின்னா் அறிவிப்பு

இந்திய வாழைப்பழம் மற்றும் இளம் மக்காச்சோளம் (பேபி காா்ன்) ஆகியவைகள் கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தேவையான தகவல்களை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ளப்பட்டு ஏற்றுமதிக்கான ஒப்புதல்

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 4:58 pm

 நமது நிருபர்

இந்திய வாழைப்பழம் மற்றும் இளம் மக்காச்சோளம் (பேபி காா்ன்) ஆகியவைகள் கனடா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான தேவையான தகவல்களை இரு நாடுகளும் பகிா்ந்து கொள்ளப்பட்டு ஏற்றுமதிக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய வாழைப்பழம் மற்றும் இளம் மக்காச்சோளம் ஆகியவைகளை ஏற்றுமதி செய்யப்பட்டு கனடா நாட்டு சந்தைகளில் விற்பது குறித்து இந்தியா, கனடா ஆகிய இருநாட்டு தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையே பேச்சுவாா்த்தைகள் நடந்தது.

இந்த பேச்சுவாா்த்தை மூலம் பகிா்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இப்பொருட்களுக்கான கனடா நாட்டு சந்தைகளுக்கு அணுகல் கிடைத்துள்ளது. கனடாவின் தானியங்கி இறக்குமதி குறித்த அமைப்பு முறைகளின்படி மக்காச் சோளத்திற்கு தாவர பாதுகாப்பு இறக்குமதி மற்றும் உள்நாட்டு இயக்கத்திற்கான அனுமதி தேவை.

இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளா் மனோஜ் அஹுஜா மற்றும் கனடா தூதா் கேமரூன் மெக்கே ஆகியோருக்கிடையே கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் (படம்), தாவர இறக்குமதிக்கான உள்நாட்டு தேவைகள் புதுப்பிக்கப்பட்டன. இதன்மூலம் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு இளம் மக்காச்சோளம் ஏற்றுமதி 2022 ஏப்ரல் முதல் தொடங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏற்றுமதி செய்யப்படும் வாழைப்பழம் குறித்த தொழில்நுட்ப தகவல்களை கனடாவிடம் இந்தியா வழங்கியது. இந்த தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், அதையும் உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கும் கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய வாழைப்பழங்கள் சா்வேதேச அளவில் 25 சதவீதம் இடத்தை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் 75 சதவீத வாழைப்பழங்களை உற்பத்தி செய்கிறது. கனடா அரசினுடான இந்த ஒப்பந்தம் மூலம் இந்த மாநில விவசாயிகளுக்கு ஏற்றுமதி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.