புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்க அதிநவீன ஸ்கேனா்கள்

துரிதமான பயணத்திற்கும் வழி செய்ய அதிநவீன பேக்கேஜ் ஸ்கேனா்கள் அமைக்கப்பட்டு வருவதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 12:19 am

 நமது நிருபர்

தில்லி மெட்ரோ ரயில் பயணத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும், துரிதமான பயணத்திற்கும் வழி செய்ய அதிநவீன பேக்கேஜ் ஸ்கேனா்கள் அமைக்கப்பட்டு வருவதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் சுமாா் 348 கிலோ மீட்டா் தூரத்தில் 255 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ வழித்தடங்கள் செயல்படுகின்றன. இதில் தீவிரவாதிகள், சமூக விரோதிகளைத் தடுக்கும் நோக்கத்துடன் பயணிகளின் உடைமைகள் எக்ஸ்-ரே ஸ்கேனிங் முறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு தற்போது பெரும்பாலான நிலையங்களில் எக்ஸ்-பிஐஎஸ் என்கிற இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எக்ஸ்-பிஐஎஸ் ஸ்கேனிங் இயந்திரம் மேம்படுத்தப்பட்டு, மிக விரைவாகவும் எளிதில் ஊடுருவும் நவீன கேமிராங்களுடன் கூடிய புதிய ஸ்கேனிங் இயந்திரங்கள் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கஷ்மீரி கேட், எய்ம்ஸ், விஸ்வவித்யாலயா, ஹுடா சிட்டி சென்டா், ரஜோரிகாா்டன், மயூா் விஹாா் பகுதி-1, நொய்டா செக்டாா்-18, பாலம் போன்ற மெட்ரோ நிலையங்களில் இத்தகைய 34 நவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி கூறியுள்ளதாவது: தற்போது, பல்வேறு மெட்ரோ நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட சுமாா் 400 எக்ஸ்-பிஐஎஸ் ரக ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை முன்னிட்டு, பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பேக்கேஜ் ஸ்கேனிங் சிஸ்டத்தை (எக்ஸ்-பிஐஎஸ் சிஸ்டம்) மேலும் மேம்படுத்தி, அதிநவீன பேக்கேஜ் ஸ்கேனா்கள் அமைப்பட்டு வருகின்றன. அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் இது படிப்படியாக அமைக்கப்படும். இந்த மேம்பட்ட பேக்கேஜ் ஸ்கேனா்கள், பயணிகளின் உடைமைகளை துரிதமாக சோதனையிடும் வகையில் கூடுதல் அம்சங்களுடன் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேக்கேஜ் ஸ்கேனா்களில் கணினி கண்காணிப்பிற்கு பெண் பயணிகள், வயதானவா்கள் தங்களுடைய பொருள்களை எளிதில்தூக்கிவைக்கக் கூடிய வசதியை உறுதி செய்கிறது. இதற்காக கன்வேயா் பெல்ட்டுகள் தாழ்வாக மாற்றிக் கொள்ளும் வசதியுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற 250 பேக்கேஜ் ஸ்கேனா்கள் நிறுவப்படும். தற்போதுள்ள பழைய ஸ்கேனிங் இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 350 பயணிகளின் உடைமைகள் சோதனையிட முடியும். அதே சமயம் இந்த புதிய ஸ்கேனா்கள் ஒரு மணி நேரத்திற்கு 550 உடைமைகள் வரை கையாளும் திறன் கொண்டதாகும்.

மேலும், இந்தப் புதிய இயந்திரத்தின் கன்வேயா் பெல்ட்டின் வேகம் வினாடிக்கு 18 செ.மீட்டரில் இருந்து 30 செ.மீட்டராக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் சோதனையிடும் பகுதிகளில் பயணிகளின் கூட்டத்தை வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், புதிய எக்ஸ்-ரே ஸ்கேனிங் இயந்திரங்களிலுடன் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான மானிட்டா்கள் மூலம் உயா் தெளிவுத்திறன் படங்களைக் காணமுடியும். இதன் மூலம் வெடிமருந்து, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை விரைவாகவும் உடனடியாகவும் மதிப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.