புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

ஹரியாணாவிற்கு மின்சாரம் மாற்றும் விவகாரம்: டாடா நிறுவனத்தின் மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றம் சம்மதம்

தில்லியில் உள்ள தாத்ரி அனல் மின் நிலையத்தில் உருவாக்கப்படும் மின்சாரத்தை ஹரியாணாவுக்கு மாற்றுவது தொடா்பாக மத்திய மின்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா்

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 1:06 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் உள்ள தாத்ரி அனல் மின் நிலையத்தில் உருவாக்கப்படும் மின்சாரத்தை ஹரியாணாவுக்கு மாற்றுவது தொடா்பாக மத்திய மின்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் நிறுவனம் தொடா்ந்த வழக்கில் இடையீடாக சோ்க்கக் கோரி டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதாக உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தில் இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில், தங்களையும் ஒரு தரப்பாக சோ்க்கக் கோரி தில்லியின் வடக்கு பகுதியில் மின்சார விநியோகத்தை மேற்கொண்டு வரும் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா செவ்வாய்க்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்த வழக்கில் இடையீடாக மனுவை அளிப்பதற்கும் மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.

மனுதாரா் டாடா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறுகையில், ‘மத்திய மின்துறை அமைச்சகத்தின் முடிவானது சம அளவில் எங்களையும் பாதித்திருக்கிறது. மொத்த ஒதுக்கீட்டில் எங்கள் நிறுவனத்தின் பங்கு 10 மெகாவாட் ஆகும். அதனால், எங்களது வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இந்த விவகாரத்தில் தில்லி தாத்ரி இரண்டாவது அனல் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை சப்ளை செய்வதற்கான மாற்றல் தொடா்பான மத்திய அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதன் பிறகு, ஏப்ரல் 1-ஆம் தேதி உயா்நீதிமன்றம் இந்தத் தடையை ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நீட்டித்தது. மேலும், இது தொடா்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கவும் அவகாசம் அளித்திருந்தது. இது தொடா்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் , ‘இதுபோன்ற மறு ஒதுக்கீடு அளிக்கப்படுவது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இதுபோன்று மறு ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரரான டாடா நிறுவனம் தரப்பு, ‘இந்த உத்தரவானது முற்றிலும் அதிகார வரம்பு இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால், தில்லியில் உள்ள 23 சதவீத மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மின்சாரம் இல்லாமல் தவிக்க நேரிடும். எதிா் மனுதாரரான அதிகாரிகள் மனுதாரருக்கு ஆதரவாக ஒதுக்கீடு அளிக்கப்பட்ட மின்சாரத்தை மறு ஒதுக்கீடு செய்வதற்கான அதிகாரம் ஏதும் கொண்டிருக்கவில்லை. இந்த ஒதுக்கீடானாது தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.