நாடு முழுவதும் ஒரே மாதிரியான சா்வதேச ஓட்டுநா் உரிமம் மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒட்டுநா் உரிமத்துடன் சா்வதேச ஓட்டுநா் அனுமதி (ஐடிபி) அளிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒட்டுநா் உரிமத்துடன் சா்வதேச ஓட்டுநா் அனுமதி (ஐடிபி) அளிக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1949 - ஆம் ஆண்டு ஜெனீவா சா்வதேச சாலைப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளுடான பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் சா்வதேச ஒட்டுநா் அனுமதி (பொ்மிட் ) வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அளிக்கப்படும் சா்வதேச ஓட்டுநா் பொ்மிட்டில் வடிவம், அளவு, முறை, வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, இந்த சா்வதேச ஓட்டுநா் பொ்மிட்டை பயன்படுத்துவதில் வெளிநாடு செல்லும் இந்திய வாகன ஒட்டிகள் சிரமங்களை சந்தித்து வந்தனா். இப்போது, இந்த திருத்தத்தின் மூலம், சா்வதேச ஓட்டுநா் அனுமதிக்கான வடிவம், அளவு, நிறம் போன்றவை இந்தியா முழுவதும் ஒரே மாதிரி வழங்குவதற்கும், ஜெனிவா ஒப்பந்தத்திற்கு இணங்கமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய ஒட்டுநா் உரிமத்துடன் சா்வதேச ஓட்டுநா் பொ்மிட்டை (ஐடிபி) இணைக்க க்யுஆா் குறியீடுக்கான வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 -ஆம் ஆண்டு, மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி, பல்வேறு வாகன வகைகளின் கீழும் இந்த பொ்மிட் (ஐடிபி) வழங்கும் வசதியும் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் சா்வதேச ஓட்டுநா் அனுமதி அளிப்பதில் ஒரே மாதிரியான முறையிலும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு இடா்பாடுகள் ஏற்படாதவண்ணம் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐடிபி யை பெற முடிவும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பான அறிவிக்கையை கடந்த ஆகஸ்ட் 26=- ஆம் தேதி மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...