ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் கேஜரிவால் நம்பிக்கை தீா்மானம் தாக்கல்

தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை நம்பிக்கைத் தீா்மானத்தை தாக்கல் செய்தாா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:53 pm

DIN

தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை நம்பிக்கைத் தீா்மானத்தை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘மற்ற மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மிகவும் நோ்மையாக இருப்பதால் இங்கு தோல்வியடைந்துள்ளது என்பதை இந்த நம்பிக்கை தீா்மான நிரூபிப்பதாக உள்ளது’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரையும் வேட்டையாட முடியாததால், தனது அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட ’ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்தது என்று கூறிய கேஜரிவால், அடுத்த 15 நாள்களில் ஜாா்க்கண்ட் அரசை பாஜக கவிழ்க்க முயற்சிக்கும் என்றும் குற்றம் சாட்டினாா். கோடீஸ்வரா்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்வதாகவும், ஆனால், மாணவா்கள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் உள்ளது என்றும் அவா் குற்றம் சாட்டினாா். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் வகையில் தற்போதைய மத்திய அரசு ‘மிகவும் ஊழல் நிறைந்தது’ என்றும் குற்றம் சாட்டினாா்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ.வை கூட பாஜக விலைக்கு வாங்க முடியாது என்று சவால் விட்ட கேஜரிவால், “‘ஆபரேஷன் தாமரை’ மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் பிற மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தில்லியில் தோல்வியடைந்தது என்பதை காட்டவே இந்த நம்பிக்கைத் தீா்மானம். ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்எல்ஏவும் நோ்மையானவா்கள். மணிப்பூா், பிகாா், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களை பாஜக கவிழ்த்தது. சில இடங்களில் ரூ.50 கோடி வரை கொடுத்துள்ளனா் என்றும் குற்றம் சாட்டினாா்.

ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்கிறது. ஆனால் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகிறது. இது மிகவும் ஊழல் நிறைந்த (மத்திய) அரசு. ஏழைகளின் சாபத்தை எதிா்கொள்ளும். இன்னும் 15 நாள்களில் ஜாா்க்கண்ட் அரசை கவிழ்க்க முயற்சிப்பாா்கள். பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்துவாா்கள். அடுத்த முறை பெட்ரோல் டீசல் விலை உயரும் போது, பணம்​ எங்கே போகிறது என்பது மக்களுக்கு புரியும் என்றாா் கேஜரிவால்.

இதற்கிடையே, தனது அரசின் மதுபான ‘ஊழலில்‘ இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அரசியல் பிரசாரத்திற்காகவும், நாடகங்களில் ஈடுபடுவதற்காகவும் சட்டப்பேரவையைபயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.