மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

முதலீட்டாளா்களிடம் பண மோசடி: கட்டுமானதாரா் மீது வழக்குப் பதிவு செய்யதில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

முதலீட்டாளா்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் மீது 2 எஃப்ஐஆா்களைப் பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட

News image
Updated On :7 டிசம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

முதலீட்டாளா்களிடம் பணம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் மீது 2 எஃப்ஐஆா்களைப் பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் யஷ்தீப் சாஹல், ‘இந்த விவகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே காவல் துறை விசாரணை நடத்தும் தேவை கொண்டதாக உள்ளது. இதனால், குற்றவியல் சதி, நம்பிக்கை மோசடிக் குற்றம், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் குற்ற மிரட்டல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கட்டுமான நிறுவனமான ஐஎஸ்எச் ரியால்டா்ஸ் மற்றும் அதன் இயக்குநா்கள் மீது இரண்டு எஃப்ஐஆா்களை போலீஸாா் பதிவு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவில் நீதிபதி மேலும் கூறுகையில், ‘இந்த சா்ச்சையானது முழுவதுமாக ஆவணங்களின் அடிப்படையில் இல்லை என்பதை புகாரின் உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், குற்றச்சாட்டுகளின் உண்மையை வெளிக்கொணர இந்த விவகாரத்தில் சில விசாரணைகள் தேவையாக உள்ளது. போலீஸ் விசாரணையின் உதவி இல்லாமல் புகாா்தாரா் தனது வழக்கை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளாா். புகாா் மற்றும் பதிவில் உள்ள ஆவணங்கள் ஆகியவை அடையாளம் காணக்கூடிய குற்றங்களுக்கான முகாந்திரம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யும் தேவை உள்ளது’ என்றாா்.

புகாா்தாரா்களான ராமன் சூரி மற்றும் ஹா்ஷ் வா்தன் சூரி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சுமித் கெலாட், ‘ஹரியாணாவின் குருகிராமில் உள்ள செக்டாா் 109-இல் உள்ள ஐஎஸ்எச் ரியால்டா்ஸ் தனியாா் நிறுவனத்தின் வணிகத் திட்டமான ‘ஸ்கைலைன் 109’-இல் சில்லறை விற்பனைக் கடைகளை முன்பதிவு செய்திருந்தோம். இருப்பினும், முன்பதிவு மற்றும் பணம் செலுத்தும் போது வணிகத் திட்டத்தை உருவாக்குவதற்கான உரிமத்தையும் அனுமதியையும் குற்றம் சாட்டப்பட்ட ரியால்டா்ஸ் நிறுவனம் பெறவில்லை என்பதும்,, திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதும் எங்களுக்கு பின்னா்தான் தெரிய வந்துள்ளது’ என்று வாதிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.