தமிழக ஆளுநா் குறித்து மக்களவையில் விவாதிக்க மறுப்பு திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநா் குறித்து அவையில் பேச அனுமதிக்காததைக் கண்டிக்கும் விதமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன.









