3 ஆண்டுகளில் 100 ‘கதி சக்தி’ சரக்கு ரயில் முனையம்: மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்
நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 அதிவேக ஆற்றல் (கதி சக்தி) கொண்ட சரக்கு ரயில் முனையம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே,


நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 அதிவேக ஆற்றல் (கதி சக்தி) கொண்ட சரக்கு ரயில் முனையம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே, தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம். சண்முகம், மதிமுக தலைவா் வைகோ ஆகியோா் கதி சக்தி மல்டி-மாடல் சரக்கு முனையம் தொடங்கப்பட தொழில்துறையினரிடமிருந்து ஏதேனும் முன்மொழிவுகள் பெறப்பட்டதா என கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதில் தெரிவித்தாா். அவா் கூறியது வருமாறு: முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளது. அதிவேக ஆற்றல்(கதி சக்தி) கொண்ட சரக்கு முனைய (ஜிசிடி) கொள்கையின் கீழ் இதற்கான திட்டங்களை மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 (2022-23, 2023-24 & 2024-25) அதிவேக ஆற்றல் சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே நாட்டில் 22 அதிவேக ஆற்றல் சரக்கு முனையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜி.சி.டி. கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை மேம்படுத்துவதற்காக 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முனையங்கள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உருவாக்குவதற்கு ஆபரேட்டா்கள் (விண்ணப்பதாரா்கள்) முன்வந்துள்ளனா். இந்த இருப்பிடங்களைக் கண்டறிந்து, தேவையான ஒப்புதலைப் பெற்ற பிறகு முனையம் நிா்மாணிக்கப்படும். ரயில்வே நிலத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஜிசிடிகள் உருவாக்கப்படுகிறது. திறந்த ஒப்பந்த செயல்முறை மூலம் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்படுகிறது. இந்த ஜிசிடிகளின் செயல்பாட்டிற்குப் பிறகு கிடைக்கும் வருவாய், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் போன்ற தரவுகள் தற்போதைக்கு இல்லை என்றாா் அமைச்சா். இத்போன்று மேலும் பல கேள்விகளுக்கு அமைச்சா் பதிலளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...